தமிழகம் ரூ100 கொடுத்தா ரூ34தான் மத்திய அரசு பங்கு.. ஆனால் உபி, பீகாருக்கு? என்னா அநியாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அதிக வருவாய் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்தாலும் மத்திய அரசு நமக்கு 'கிள்ளிதான்' கொடுக்கிறது... ஆனால் குறைந்த வருவாய் தரும் வட மாநிலங்களுக்கு மாநில அரசு 'அள்ளிதான்' கொடுக்கும் பெருங்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தமிழக விவசாயிகள் மிகப் பெரும் போராட்டத்தை நடத்தினர். ஆனால் மத்திய அரசு இந்த போராட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் நிர்வாணமாக ஓடவிட்டது.

இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே உத்தரப்பிரதேசத்தில் புதியதாக பொறுப்பேற்ற பாஜக அரசு, விவசாயிகளின் ரூ36,000 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேச அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. போராடியது என்னவோ தமிழக விவசாயிகள்... ஆனால் அறுவடை செய்து கொண்டதோ உத்தரப்பிரதேச விவசாயிகள்.

மத்தியா அரசு உதவி

மத்தியா அரசு உதவி

உத்தரப்பிரதேச விவசாயிகளின் கடனை ரத்து செய்வதற்கான நிதியை மத்திய அரசுதான் தரப்போகிறது. சரி மத்திய அரசு எப்படி இந்த நிதியைத் தருகிறது? வேறு எங்க இருந்துதான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் மூலமாகத்தான்.

பிறமாநில வரி வருவாய்

பிறமாநில வரி வருவாய்

உண்மையில் இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கர்நாடகா ஆகிய 4 மாநிலங்கள் மூலமாக மட்டுமே 50% வரி வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. எஞ்சிய அனைத்து மாநிலங்களும் சேர்ந்துதான் 50% வரி வருவாயை மத்திய அரசுக்கு கொடுக்கிறது.

கிடைப்பது இவ்வளவுதான்

கிடைப்பது இவ்வளவுதான்

சரி மத்திய அரசு, மாநிலங்களுக்கு எவ்வளவு தொகையை திருப்பித் தருகிறது என பாருங்கள்... மகாராஷ்டிரா வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ100 கொடுத்தால் அதில் மாநிலத்துக்கான பங்கு என ரூ15 கிடைக்கும். தமிழகம் ரூ100 கொடுத்தால் அதில் மத்திய அரசு நமக்கு ரூ34 திருப்பித் தரும்.

வட இந்திய மாநிலங்களுக்கு ..

வட இந்திய மாநிலங்களுக்கு ..

வட இந்திய மாநிலங்களுக்கு ..

ஆனால் உபி மாநில அரசு மூலமாக மத்திய அரசுக்கு வரி வருவாயாக ரூ100 கிடைத்தால் எவ்வளவு திருப்பி கிடைக்கும் தெரியுமா? உபி அரசுக்கு பங்காக ரூ200 தருகிறது மத்திய அரசு. பீகாருக்கு ரூ400 பங்காக கொடுக்கிறது என்பதுதான் கொடுமையின் உச்சகட்டம். அதிக வருவாய் தரும் 4 மாநிலங்களுக்கு பட்டை நாமத்தைப் போட்டுவிட்டு இந்த மாநிலங்கள் வசூலித்து தரும் வரியை பிற மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு பெயர் வஞ்சிக்கப்படுதல் அல்லாமல் வேறு என்னவாம்?

இன்னமும் வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது என்பதுதானே யதார்த்தம்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Maharashtra, TamilNadu, Gujarat, and Karnataka account for more than half of all tax collections of the Union government. Contrast that with the average UP who contributes just Rs 7000, roughly one-third of the average Tamilian. But the average UP gets back nearly twice as much from the Centre every year as the average Tamilian.
Please Wait while comments are loading...