ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் உள்ளூர் பயணங்களுக்கான கட்டணம் ரூ. 499 மட்டுமே.. வரிகள் தனி!
மும்பை: ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் உள்ளூர் பயணங்களுக்கான அடிப்படைக் கட்டணமாக ரூ. 499 சலுகை அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து பல்வேறு விமான நிறுவனங்கள் உள்ளூர் பயணத்திற்கான கட்டணங்களில் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஸ்பைஸ்ஜெட்டும் இணைந்துள்ளது.
இந்த நிறுவனம் எர்லி பேர்ட் என்ற பெயரில் ஒரு சலுகைக் கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் பயணங்களுக்கான அடிப்படைக் கட்டணமாக ரூ. 499 அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16 முதல் 24 வரை
இந்த சலுகையை அடுத்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த சலுகைக்கான முன்பதிவு செப்டம்பர் 1ம் தேதி அதாவது இன்று தொடங்கியுள்ளது. 3 நாட்களுக்கு முன்பதிவு நடைபெறும்.

அடிப்படைக் கட்டணம் மட்டுமே
நாடு முழுவதும் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளளாம். இந்த கட்டணமானது அடிப்படைக் கட்டணம் மட்டுமே. அதேசமயம், பிற வரிகள், கட்டணங்கள் இதில் அடங்காது.

நேரடி - இணைப்பு விமானங்களில்
ஸ்பைஸ்ஜெட்டின் நேரடி மற்றும் இணைப்பு விமானங்களில் இந்த சலுகையைப் பெறலாம்.

கடந்த வாரமும் ஒரு சலுகை
கடந்த வாரம் இதேபோல, ரூ. 1888க்கு ஒரு சலுகைக் கட்டணத்தை இந்த நிறுவனம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

கலாநிதி மாறன்
சன் டிவியின் கலாநிதி மாறன் நடத்தி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், 49 நகரங்களுக்கு 340 விமான சேவைகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8 நகரங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவையாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications