Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐசியூவில் அட்மிட்டான இளம்பெண் பலாத்காரம்.. மயக்கஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் செய்த கொடூரம்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்ட 24 வயது இளம்பெண்ணை அதிகாலையில் யாரும் இல்லாத போதும் மயக்க ஊசி செலுத்தி மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில் தான் இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் அருகே உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். ஆனாலும் உடல்நலம் குணமாகவில்லை.

Nursing Staff rapes woman who admitted to the ICU of a private hospital in Rajasthan

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டார்.

நுரையீரல் தொற்று பிரச்சனையை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் அந்த இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அவர் படிப்படியாக குணமாகி வருகிறார். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் அந்த இளம்பெண் அட்மிட் செய்யப்பட்டுள்ள ஐசியூ அறையில் யாரும் இல்லை. அந்த சமயத்தில் மருத்துவமனை ஊழியர் சிராக் யாதவ் பணியில் இருந்துள்ளார்.

அப்போது சிராக் யாதவ் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் அந்த பெண்ணை தவறாக அணுகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட முயன்றுள்ளார். அப்போது பயந்துபோன சிராக் யாதவ் அவரது வாயை பொத்தி மயக்க ஊசி செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மயங்கி உள்ளார்.

அதன்பிறகு சிராக் யாதவ் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மயக்கத்தில் இருந்து கண்விழித்த அந்த இளம்பெண் சம்பவம் குறித்து தனது கணவருக்கு போனில்அழுதபடி கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் முதற்கட்டமாக ஆய்வு செய்தனர். மேலும் மருத்துவமனை ஊழியர் சிராக் யாதவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+