71வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஒடிஷா முதல்வருக்கு உடல் நலக்குறைவு.. விழாவில் பரபரப்பு
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஒடிஷா மாநில முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனேஸ்வர்: ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இந்தியா முழுவதும் இன்று 71வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் அம்மாநில முதல்வர் கொடியேற்றி உரையாற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் நவீன் பட்நாயக், மேடை ஏறி சுதந்திர தின உரையாற்றினார். அப்போது திடீரென அவர் நிலை தடுமாறினார். இதனால் பதற்றமடைந்த பாதுகாவலர்கள், உடனடியாக அவருக்கு இருக்கையை வழங்கினார்கள்.
அப்போது, நவீன் பட்நாயக்கிற்கு முகம் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. அதனை நன்றாக துடைத்துக் கொண்ட பட்நாயக், இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
இதனிடையே பாதுகாவலர்கள் அவருக்குக் குடை பிடித்தனர். இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications