பாஜகவுக்கு இம்மி கூட சான்ஸ் தரக் கூடாது... ஓபிசி வாக்குகளை அறுவடை செய்ய நவீன் பட்நாயக் படுதீவிரம்!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் பாஜகவுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் தந்துவிடக் கூடாது என்பதால் ஓபிசி வாக்குகளை (இதர பிற்படுத்தப்பட்டோர்) அறுவடைய செய்ய நவீன் பட்நாயக் படு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். ஒடிஷாவின் அரசியல் களம், ஜாதிய அரசியல் குறித்த விரிவான அலசலை பார்ப்போம்.
ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையேதான் போட்டி நிலவுகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஒடிஷா சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.
அந்த தேர்தலில் பிஜூ ஜனதா தளம் 112 இடங்களில் வென்றது. 2014-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 5 இடங்கள் குறைவு. பிஜூ ஜனதா தளம் பெற்ற வாக்குகள் 44.71%.

ஒடிஷாவில் பாஜக
ஒடிஷாவில் பாஜகவுக்கு மொத்தம் 23 இடங்கள் கிடைத்தன. 2014-ல் ஒடிஷாவில் பாஜக 10 இடங்களில் வென்றிருந்தது. அதேநேரத்தில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் 32.49%. அதாவது முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக கூடுதலாக 14.% வாக்குகளைப் பெற்றது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைதான் காங்கிரஸ். 2014 தேர்தலில் 16 இடங்களில் வென்ற காங்கிரஸ் 2019-ல் வென்றும் 9 இடங்கள் என சிங்கிள் டிஜிட்டுக்குப் போனது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 16.12% வாக்குகள் கிடைத்தன. 2014- தேர்தலை ஒப்பிடுகையில் 9.6% வாக்குகள் குறைவு. அதாவது காங்கிரஸ் கட்சியின் இடத்தை கச்சிதமாக கைப்பற்றிக் கொண்டது பாஜக. இதுதான் ஒடிஷாவின் அரசியல் நிலவரம்.

ஜாதி அரசியல்
பொதுவாக ஒடிஷா தேர்தல் களத்தில் ஜாதிகள் செல்வாக்கு செலுத்தியது இல்லை. ஒடிஷா மாநிலத்தைப் பொறுத்தவரையில் தலித்துகள், பழங்குடிகளின் மக்கள் தொகை 38%. ஒடிஷாவில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 52%. கிறிஸ்தவர்கள் 2.77%; இஸ்லாமியர்கள் 2.17% பேர். தலித்துகள், பழங்குடிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஆளும் பிஜூ ஜனதா தள் அரசு செய்துள்ளதால் அவர்கள் முழுமையாக அந்த கட்சியை ஆதரிக்கின்றனர். அதேபோல் பெண்களின் அமோக ஆதரவும் பிஜூ ஜனதா தளத்துக்கு இருக்கிறது. 2008-ம் ஆண்டு ரூ2-க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்தினார் நவீன் பட்நாயக். 2014-ல் தேர்தலுக்கு முன்னதாக ரூ1-க்கு 1கிலோ அரிசி என மாற்றம் செய்தார். 2019-ல் விவசாயிகள், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் நவீன். இப்படி வளர்ச்சித் திட்டங்களால் மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சியாக இருக்கிறது பிஜூ ஜனதா தளம்.

பாஜகவின் ஜாதிய வியூகம்
ஒடிஷாவில் எப்படியும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது பாஜகவின் இலக்கு. 2019 சட்டசபை தேர்தலில் இத்ற்கான முழு முயற்சியில் பாஜக இறங்கியது. அந்த தேர்தலில் இந்துத்துவா கொள்கையை அதிகம் பேசாமல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமர் மோடி என்கிற ஜாதிய அஸ்திரத்தைத்தான் பாஜக கையில் எடுத்தது. ஏனெனில் ஒடிஷாவில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் 52% உள்ளனர். ஒடிஷாவின் பாஜக முகமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இதர பிற்படுத்தபப்ட்ட ஜாதியைச் சேர்ந்தவர். தேர்தல் முடிவுகள் ஜாதிய அடிப்படையில் தீர்மானிக்கப்படாத போதும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் படுமுனைப்பாக உள்ளார். ஏனெனில் ஒடிஷா அரசியலில் பிஜூ ஜனதா தளத்துக்கு உடனடி எதிரியாக அல்லது பிஜூ ஜனதா தளத்தை தோற்கடிக்கக் கூடிய வல்லமை கொண்ட சக்தியாக பாஜக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாஜக 32% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தொகுதிகள்தான் குறைவு. ஆகையால் பாஜக எந்த வகையில் மேலும் வலிமையாகி கூடுதல் தொகுதிகளை, வாக்குகளைக் கைப்பற்ற இடம் தந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் நவீன் பட்நாயக் உறுதியாக இருக்கிறார்.

பாஜகவின் வாக்கு வங்கி
ஒடிஷாவில் தற்போதைய நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை சமூகமான கந்தாயத்துகள் பாஜகவின் வாக்கு வங்கியாகவும் இருக்கின்றனர். தங்களுக்கு 27% இடஒதுக்கீட்டை நவீன் பட்நாயக் அரசு அமல்படுத்தவில்லை என்கிற அதிருப்தி அவர்களிடத்தில் இருக்கிறது. ஒடிஷா அரசியலில் பிராமணர்கள், கயஸ்தாஸ் (கரன்) ஜாதியினருக்கு இணையாக தங்களது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பது கந்தயா ஜாதியினரின் நீண்டகால போராட்டம். இதனை கணக்குப் போட்டு அவர்களது வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வகையில் பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது.

நவீன் பட்நாயக்கின் கேம்
இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்து கொண்டுதான் இதர பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான விவகாரங்களில் முதல்வர் நவீன் பட்நாயக் தீவிரம் காட்டுகிறார். கடந்த ஆண்டே பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் தொடர்பான கணக்கெடுப்பு நடத்துவதற்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தவர் நவீன் பட்நாயக். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் நவீன்பட் நாயக். கடந்த ஆகஸ்ட் மாதம் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த ஜாதிகள் இடம்பெற்லாம் என்பதை மாநிலங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது. அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிஜூ ஜனதா தளம் குழுவினர், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இடஒதுக்கீடு விவகாரத்திலும் நவீன் பட்நாயக் தீவிரம் காட்டுகிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இடஒதுக்கீடு அளவு 50% என இருப்பதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதும் நவீன் பட்நாயக்கின் நிலைப்பாடு. ஒடிஷாவில் தலித்துகள் பழங்குடிகள் 38% ஆக உள்ள நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 11.25% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நவீன் பட்நாயக் அரசு நடவடிக்கை எடுத்த போதும் நீதிமன்றங்களால் அது நிறைவேற்றப்படாமல் முடங்கிப் போனது. இதனால் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50% என்பதை நீக்கக் கோரி ஒடிஷா சட்டசபையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒடிஷா மாநில ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இப்படி ஒடிஷா மாநில அரசையும் ஜாதிய அரசியலை நோக்கி திசைதிருப்பிவிட்டிருக்கிறது பாஜக. வளர்ச்சித் திட்டங்களால் மக்கள் மனங்களை வென்ற நவீன் பட்நாயக், ஜாதிய அரசியலையும் லாவகமாக கையாண்டு யுத்தத்தில் வெல்வாரா? என்பது பொதுவான எதிர்பார்ப்பு.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications