ஐசியுவில் இனி ஆன்மீக பஜனை.. ஏன் தெரியுமா? ஒடிசா மருத்துவமனை சொன்ன காரணத்தை பாருங்க! அசந்துபோவீங்க
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுவதற்காக ஐசியு பிரிவில் ஆன்மீக பஜனைகளை ஒலிக்கவிட மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சையில் இருப்போர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் எனில் நல்ல இசையை ரசிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மனதை மேலும் வலிமையாக்கி உற்சாகமடைய செய்யும். இதன் மூலம் மருந்துகள் சிறப்பாக வேலை செய்து உடல் விரைவில் ஆரோக்கியம் பெறும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இப்படி இருக்கையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பஜனை பாடல்களை ஒலிக்கவிட மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் பஜனை பாடல்கள் ஒலிபரப்பப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையின் ஐசிபியு பிரிவில் பாடல்கள் ஒலிக்கப்படும். மருத்துவமனையின் அதிகாரிகள் அனைத்து ஐசியு பிரிவிலும் இந்த பாடலை ஒலிபரப்ப அனுமதியளித்துள்ளனர். இந்த ஆன்மீக பஜனைகள் நோயாளிகளின் எண்ணத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், இது நோயிலிருந்து அவர்களை விரைவில் குணமடைய வைக்க உதவும் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து மருத்துவமனையின் துணை வேந்தர், டாக்டர் அபினாஷ் ரூத் கூறுகையில், "இனிமையான ஒலி குணமடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பான திட்டம் குறித்து ஆலோசித்த பிறகு மருத்துவமனையின் அனைத்து ஐசியுக்களிலும் பஜனையை ஒலிக்கவிட முடிவெடுத்துள்ளோம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இதற்காக அரசு ஒப்புதலும் பெறப்படும். இப்பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டென்டர் விடப்படும்" என்று அவர் கூறியுள்ளார். நோயாளிகள் விரைவில் குணமடைய இதுபோன்று இசையை பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு காலகட்டத்தில் குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதுபோன்று இசை ஒலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒடிசா மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு சில எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. அதாவது, ஆன்மீக பஜனையை ஒலிக்கவிடுவது என்று முடிவெடுத்தால் எந்த மதத்தின் பஜனையை ஒலிக்கவிடுவது? என்கிற கேள்வி எழும். சிலர் பெரும்பான்மை மதத்தின் பஜனை பாடலை கேட்பார்கள். சிலர் சிறுபான்மை மதத்தின் பாடலை விரும்புவார்கள். இன்னும் சிலர் மதமற்றவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது இது தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஒருவேளை மருத்துவமனை குறிப்பிட்ட மதம் தொடர்புடைய பாடல்களை ஒலிக்கவிட்டால் பிரச்னைகள்தான் எழும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் நோயாளிகள் விரைவில் குணமடைய தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications