கொரோனா காலத்தில் ஹோட்டல்களுக்கு ஜாலி டூர்.. எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்.. பிஜு ஜனதா தளம் அதிரடி
புவனேஸ்வர்: கொரோனா பரவல் காலத்தில், ஜாலியாக ஹோட்டல்களில் தங்கியிருந்து பொழுது போக்கியதற்காக, ஒடிசாவில், தனது கட்சி எம்எல்ஏ பிரதீப் பனிகிராஹி என்பவரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளது பிஜு ஜனதாதளம்.
கஞ்சம் மாவட்டத்தில் முக்கிய பிஜு ஜனதா தளம் தலைவராக இருந்தவர், பிரதீப் பனிகிராஹி. ஆனால் அவர் மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஹோட்டல்களில் தங்கி பொழுது போக்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிஜு ஜனதாதளம் கட்சி இந்த நடவடிக்கை குறித்து அறிக்கை மூலம் மக்களுக்கு விளக்கியுள்ளது. அதில், மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களில், பிரதீப் பனிகிராஹி தங்கி ஜாலி செய்து வந்தார்.
தொகுதியைச் சேர்ந்த மக்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் பறித்து ஏமாற்றியுள்ளார். இதற்கு ஐஎப்எஸ் அதிகாரி அபய் கந்த் பதக் மற்றும் அவர் மகன் ஆகாஷ் குமார் பதக் ஆகியோர் உடந்தை. இவர்கள் இப்பபோது கைது செய்யப்பட்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக அவர்கள் சொத்து சேர்த்துள்ளனர்.
கஞ்சம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், பிரதீப் பனிகிராஹி சார்டட் விமானத்தில் பயணித்து உல்லாச வாழ்க்கை நடத்தியுள்ளார். இவரும், பதக் குடும்பமும், மும்பை தாஜ் ஹோட்டலில் ரூ.84 லட்சம் செலவிட்டு தங்கியுள்ளனர். டெல்லியிலுள்ள தாஜ் ஹோட்டலிலும் தங்கியுள்ளனர்.
அதிகாரம் கையில் இருக்கிறது என்பதால் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதற்காகவும், அகங்காரத்தோடு நடந்து கொண்டதற்காகவும், பிரதீப் பனிகிராஹி மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிஜு ஜனதா தளம் விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications