ஒரிசாவில் கணவர் வெறிச்செயல்.. மனைவியின் அந்தரங்கப் பகுதிகளை பிளேடால் அறுத்த கொடூரம்
புவனேஸ்வர்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஒரு நபர், அவரது அந்தரங்கப் பகுதிகளை பிளேடால் அறுத்துக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார்.
மேலும் டியூப்லைட்டாலும் அவரது அந்தரங்கப் பகுதியில் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
அந்த மிருகக் குணம் படைத்த நபரின் பெயர் ரஞ்சன் பாண்டா. இந்த மிருகத்திற்கு 40 வயதாகிறது. இவரது மனைவி பெயர் ஜசோதா. கடந்த 2005ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமானது முதலே வரதட்சணை கூடுதலாக கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்தார் ரஞ்சன் பாண்டா.
மேலும் மனைவியின் நடத்தை குறித்தும் பாண்டாவுக்கு சந்தேகம் வந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 24ம் தேதி இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் பாண்டா. வந்தவர் மனைவியிடம் சண்டை போட்டார். பின்னர் மயக்க மருந்தைக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் கத்தியை எடுத்து மனைவியின் தலையை மொட்டை அடித்தார். பிறகு அவரது அந்தரங்கப் பகுதியை பிளேடால் சரமாரியாக கீறினார். மேலும் அங்கு டியூப்லைட்டையும் செருகி கொடூரமாக நடந்து கொண்டார்.
இந்த அக்கிரமத்தை நடத்தி முடித்தி பிறகு அவருக்கு புத்தி வந்துள்ளது. செய்த காரியத்தை எண்ணிப் பதறிய அவர் மனைவிக்கு அவரே தையல் போட முயற்சித்துள்ளார். ஆனால் ரத்தம் கொட்ட துடித்த மனைவியைப் பார்த்துப் பயந்து போன அவர், உடனடியாக ஜசோதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு மனைவியை சேர்த்து விட்டு தலைமறைவாகி விட்டார். படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜசோதாவுக்கு தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர் டாக்டர்கள். ஜசோதாவின் சகோதரர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுததுள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாண்டாவைத் தேடி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications