ஒடிஷாவின் நியாம்கிரி மலையில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்களையும் தாக்கிய கொரோனா வைரஸ்!
ராயகடா: ஒடிஷாவின் நியாம்கிரி மலைகளில் வசிக்கும் டோங்கிரியா கோண்ட் எனப்படும் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா அறிகுறிகள் உள்ளவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் திராவிடர் மரபின பழங்குடிகள் எளிதில் செல்ல முடியாத மலை முகடுகளில் கிராமம் கிராமங்களாக வாழ்ந்து வருகின்றனர். ராயகடா மாவட்டத்தின் நியாம்கிரி மலைகளில் டோங்கிரியா கோண்ட் எனப்படும் பழங்குடிகள் வசிக்கின்றனர்.

டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள்
இந்த மலைகளில் மொத்தம் 102 கிராமங்களில் 2,461 டோங்கிரியா கோண்ட் குடும்பத்தினர் வசிக்கின்றனர். டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் எண்ணிக்கை 9,597 என கணக்கிடப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்கள் இவர்கள். ராயகடா மாவட்டத்தின் பிஸ்ஸாம்கடாக், கல்யாண்சிங்பூர் மற்றும் முனிகுடா தாலுகாக்களில் இந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

சந்தைகளுக்கு பயணம்
பொதுவாக மலைகளை விட்டு வெளியேறாத இந்த மக்களிடத்தில் கொரோனா தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒடிஷா அரசு வீடு வீடாக ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் ஒருசிலருக்கு கொரோனா லேசான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. மலைகளில் இருந்து தாங்கள் சேகரிக்கும் பொருட்களை சமவெளி சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதை இந்த பழங்குடிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல்
அப்படி சந்தைக்கு சென்றவர்களுக்குதான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது கொரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நியாம்கிரி மலைகளில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. இந்த மலைகளில் இருந்து 45 கி.மீ. தொலைவில்தான் மருத்துவமனைகள் உள்ளன. ஆகையால் மலைப்பகுதிகளிலேயே கொரொனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டிருக்கிறது.

வேதாந்தா எதிர்ப்பு போராட்டம்
இந்த டோங்கிரியா கோண்ட் மக்கள்தான், ஸ்டெர்லைட் ஆலையை நடத்துகிற வேதாந்த குழுமத்தின் அலுமினிய தொழிற்சாலைக்காக நியாம்கிரி மலையில் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்கக் கூடாது என பல பத்தாண்டுகள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். இதனால் வேதாந்தா குழுமம் பெரும் பின்னடைவை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications