பேராசிரியரே பாலியல் தொல்லை.. புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.. தீக்குளித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவருக்குக் கல்லூரிப் பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனம் வெறுத்துப்போன அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். கடந்த மூன்று நாட்களாக உயிருக்குப் போராடிய அவர் சிகிச்சைப் பலனில்லாமல் நேற்றிரவு உயிரிழந்தார்.
ஒடிசாவில் உள்ள பாலசோர் ஃபக்கீர் மோகன் கல்லூரியில் பி.எட் படித்து வந்த மாணவி ஒருவர், துறைத் தலைவர் சமீர் குமார் சாஹு என்பவர் மீது கடந்த ஜூலை 1ஆம் தேதி பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்திருந்தார். கல்லூரியில் உள்ள சிறப்பு கமிட்டியிடம் அந்தப் பெண் புகாரளித்துள்ளார். அதில் பேராசிரியர் தன்னை பல மாதங்களாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தீக்குளித்த மாணவி
புகார் அளித்த பிறகும் அந்தப் பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏழு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவிக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.. இந்தச் சூழலில் கடந்த ஜூலை 12ஆம் தேதி மற்ற மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவி, கல்லூரி வாயிலின் முன்பு போராட்டம் நடத்தினார்.
அப்போது திடீரென எழுந்த அந்த மாணவி முதல்வர் அலுவலகம் அருகே சென்றுள்ளார். பிறகு திடீரெனத் தீக்குளித்துள்ளார். அவர் இதுபோல செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத் தீக்காயங்களுடன் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பு
அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே மூன்று நாட்கள் உயிருக்குப் போராடிய அவர் நேற்றிரவு உயிரிழந்ததாக எய்ம்ஸ் புவனேஸ்வர் கூறியுள்ளது. ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவிக்குச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை உட்பட அனைத்து உதவிகளும் செய்யப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11:46 மணியளவில் அந்த மாணவி உயிரிழந்தார்.
முதல்வர் உறுதி
மாணவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கல்லூரி மாணவி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அரசு அனைத்து உதவிகளையும் செய்தும், மருத்துவர்கள் குழு முயன்றும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நானே தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அரசு உறுதுணையாக இருக்கும்" என்றார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அந்தப் பெண் புகாரளித்திருந்த துறைத் தலைவர் சமீர் குமார் சாஹு மற்றும் கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் மிரட்டல்
முன்னதாக அந்த மாணவியின் தந்தை நேற்று ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எனது மகளுக்கு உடலில் 95% காயம் ஏற்பட்டுள்ளது. நான் அவளைப் பார்க்கச் சென்றேன். என்னால் என் மகளை அடையாளம் காண முடியவில்லை. எனது மகள் புகார் அளித்தவுடன் புகாரை வாபஸ் பெறும்படி கல்லூரி நிர்வாகத்தினர் எனது மகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். நாங்கள் புகாரை வாபஸ் பெறாவிட்டால், என் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும், என்னைக் கைது செய்வோம் என்றும் அவர்கள் மிரட்டினார்கள்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications