For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிக்கன நடவடிக்கைக்காக 'பஸ் டே'... மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆர்டர்

By Mathi
Google Oneindia Tamil News

Oil Minister M Veerappa Moily
டெல்லி: பொதுப் போக்குவரத்தின் அவசியம் மற்றும் சிக்கன நடவடிக்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாரத்தில் புதன்கிழமை தோறும் பேருந்து அல்லது மெட்ரோ ரயில் மூலம் அலுவலகத்துக்கு செல்லப் போவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார்.

"பஸ் டே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி. உள்ளிட்ட 14 பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் வரும் அக்டோபர் 9-ந் தேதி முதல் பின்பற்ற வேண்டும் என்று அவர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. விலை உயர்வு ஏற்படும் போதெல்லாம், பெட்ரோல், டீசலை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்ய வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெட்ரோல் பங்குகள் மூட வேண்டும் என்று வீரப்ப மொய்லி சீர்திருத்த நடவடிக்கையாக கூறி வந்தார்.

இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இந்நிலையில், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பஸ் டே என்ற திட்டத்தை அவர் கொண்டு வந்து அவரே முதலில் பின்பற்றப் போகிறார்.நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த திட்டத்துக்காக ரூ. 52 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாரந்தோறும் புதன்கிழமை அன்று பேருந்து மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தி எனது அனைத்து பயணத்தையும் மேற்கொள்வேன். அக்டோபர் 9-ந் தேதி முதல் இதைத் தொடங்க உள்ளேன் என்றார்

English summary
Leading by example, Oil Minister M Veerappa Moily today said he will travel by public transport every Wednesday, starting October 9, as part of the fuel conservation drive to save $5 billion in oil import bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X