For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லாத நோட்டுகள் ரூ5,000 வரைதான் டெபாசிட் செய்ய முடியும்- ரிசர்வ் வங்கி அதிரடி!

செல்லாத நோட்டுகளை ரூ5,000 வரைதான் ஒரு வங்கிக் கணக்கில் செலுத்த முடியும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்கள் மூலமாக கருப்புப் பணம் வெள்ளையாக்கப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை என்கிறத

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ5,000 வரை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

Old notes Deposit Rs. 5000 only once in your account

இப்படி டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு தொடர்ந்து புதிய புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது ரிசர்வ் வங்கி.

இதனிடையே இன்று செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரூ.5000 வரை மட்டும்தான் வங்கியில் டெபாசிட் செய்ய முடியும் என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. மேலும் டிசம்பர் 30ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முறை மட்டுமே ரூ5,000 டெபாசிட் செய்ய முடியும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

வங்கி ஊழியர்களைப் பயன்படுத்தி கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்கிறது ரிசர்வ் வங்கி வட்டாரங்கள்.

English summary
Deposit of an amount exceeding Rs 5,000 shall be made only once per account until December 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X