இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜைதியும், தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதியும் உள்ளனர். ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது.

எனவே, அந்த இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். பிரிவு அதிகாரியான ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசில் செயலாளராக பணியாற்றி வந்த ஓ.பி.ராவத் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். மத்திய அரசிலும், மத்தியபிரதேச மாநில அரசிலும் பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்து இருக்கிறார். வரும் 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஓ.பி.ராவத் தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.
புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ராவத் இந்த அரசியல் சாசன பதவியில் பாரபட்சம் இன்றி பணியாற்றப்போவதாக தெரிவித்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓம் பிரகாஷ் ராவத் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications