தலைவா நீயுமா?... சச்சினை ஓட்டிய ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சச்சின் டெண்டுல்கராகவே இருந்தாலும் நெட்டிசன்கள் ஓட்டுவார்கள். தங்களது கடமையைச் செய்வதிலிருந்து தவற மாட்டார்கள் என்பதை காட்டி விட்டனர் டிவிட்டராட்டிகள்.

சச்சின் போட்ட ஒரு டிவிட்டைப் பார்த்து விட்டுத்தான் இப்படி ஓட்டியுள்ளனர் ரசிகர்கள். ஆனால் இது ஜாலியான ஓட்டல்தான்.

சச்சின் டெண்டுல்கர் சுற்றுலாவுக்காக ஒரு இடத்திற்குப் போயிருந்தபோது எடுத்த படம்தான் தற்போது ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓய்வாக இருக்கிறார் சச்சின். இதனால் அடிக்கடி ஜாலியாக டூர் போய் விடுகிறார். போகும் இடத்தில் எடுக்கும் படத்தை ஷேர் செய்து வருகிறார். அப்படிப் போட்ட ஒரு படம்தான் இப்போது டிரோலுக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு தீவில் எடுத்த படம்

ஒரு தீவில் எடுத்த படம்

ஒரு தீவில் இந்தப் படத்தை எடுத்துள்ளார் சச்சின். அது பார்ப்பதற்கு இந்தியத் துணைக் கண்டம் போலத் தெரிவதால் பார்த்ததும் தான் உணர்ச்சி வசப்பட்டதாக கூறியுள்ளார் சச்சின். அதுகுறித்து டிவிட்டரில் அவர் எழுதுகையில், இந்தத் தீவுக்குப் போயிருந்தபோது இதைப் பார்த்தால் எனக்கு இந்தியா மேப்தான் நினைவுக்கு வந்தது. சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்று எழுதியுள்ளார் சச்சின். இதைப் பார்த்த பலரும் சச்சினை ஓட்டி விட்டனர். சச்சின் நீங்களுமா இப்படி, ஏன் தலைவா என்று பலர் கேட்டுள்ளனர்.

நீங்களுமா தலைவா?

பிகே என்பவரின் டிவிட்டில், என்ன சச்சின் நீங்களுமா.. உங்களுக்கென்று தரம் உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆமா நீங்க எங்கே நிக்கறீங்க!

காட்மேன் சிக்னா என்பவர் போட்டுள்ள டிவிட்டில், ஆமா நீங்க எங்கேோ நிக்கிறீங்க சச்சின் மும்பை, மகாராஷ்டிராவா என்று நக்கலடித்துள்ளார்.

ஆஹா மோடி கலக்கிட்டாரே!

பங்கஜ் மிஸ்ரா என்பவர் போட்ட டிவிட்டில் இந்த மேப்பைப் பார்த்தால் பாகிஸ்தானும், வங்கதேசமும் இந்தியாவுடன் சேர்ந்து விட்டது போலத் தெரிகிறது. ஒரு வழியாக மோடிஜி இரண்டு நாடுகளையும் இந்தியாவுடன் சேர்த்து விட்டார். அச்சே தின்! என்று கிண்டலடித்துள்ளார்.

எப்பப் பார்த்தாலும் அதே நினைப்புதான்!

ஜெர்மனி பஞ்சு என்பவர் போட்டுள்ள டிவிட்டில், எப்பப் பார்த்தாலும் சச்சினுக்கு இந்தியா குறித் சிந்தனைதான் என்று ஓட்டியுள்ளார்.

ஆஹா..!

கிளேட்டன் முர்ஸெல்லோ என்பவர், ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு என்று வியந்துள்ளார்.

தல.. கேரளாவில் நிக்கறீங்க!

ஆர்எஸ் என்பவர், பாஜி நீங்க கேரளாவில் நின்று கொண்டுள்ளீர்கள்.. ஜெய் ஹிந்த் என்று ஓட்டியுள்ளார்.

"கடவுளே" ஆனாலும் ஓட்டுவாங்கப்பா நம்மாளுங்க.. சூதானமா இருக்கனும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+