ரயிலில் தீ: குர்ஆனை எடுக்கச் சென்று உயிரிழந்த முதியவர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தீப்பிடித்த ரயிலில் பயணித்த ஒருவர் பத்திரமாக தப்பி வந்துவிட்டு பிறகு புனித நூலை எடுத்து வர திரும்பச் சென்றபோது பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ராவில் இருந்து டேராடூன் கிளம்பிய ரயில் தானேவில் சென்று கொண்டிருக்கையில் 3 பெட்டிகளில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலியானவர்களில் குஜராத் மாநிலம் தஹோத்தைச் சேர்ந்த நசீர் அகமது கான் பதான்(50) என்பவரும் அடக்கம்.
பதான் மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் அவர் பயணித்த ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. ரயில் நின்றதும் பதான் பத்திரமாக கீழே இறங்கிவிட்டார். ஆனால் தனது புனித நூலான குர்ஆனை ரயிலில் விட்டுவிட்டு வந்ததால் அவர் அதை எடுத்து வர மீண்டும் ரயிலில் ஏறினார்.
தீ வேகமாக எரிகிறது, புகை மண்டலமாக உள்ளது மீண்டும் போக வேண்டாம் என்று சக பயணிகள் தெரிவித்தும் அவர் குர்ஆனை எடுக்க தனது பெட்டிக்கு சென்றார். குர்ஆனை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது அவர் பலியானார். பதான் தீயில் சிக்கியதை பார்த்த அவரது சகோதரர் பிரோஸ் கான் அவரை காப்பாற்ற ரயிலில் ஏறி அவரும் பலியானார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications