ஏழைக்கு அடித்தது யோகம்: லாட்டரியில் 1 கோடி பரிசு.. இன்ப அதிர்ச்சியில் ஏழை வியாபாரி!!
திருவனந்தபுரம் அருகே ஒருவருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் ஏழை வியாபாரி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அந்தப்பணத்தில் சொந்த வீடு கட்ட அவர் முடிவு செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் ஏழை வியாபாரி இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.அந்தப்பணத்தில் சொந்த வீடு கட்ட அவர் முடிவு செய்துள்ளார்.
கேரளா மாநிலம் மூவாற்றுபுழா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து லாட்டரி டிக்கெட் வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்.

அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கேரள அரசின் கருண்யா லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார்.
10 டிக்கெட் வாங்கியதில் 9 டிக்கெட்டை விற்க முடிந்தது. ஒரு டிக்கெட்டை விற்க முடியவில்லை. இந்நிலையில் மதியம் இரண்டு மணிக்கு லாட்டரி குலுக்கல் நடந்தது. இதில் சந்தோஷிடம் இருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி ரூபாய் கிடைத்தது.
இதை பார்த்த அவர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சொந்த வீடு இல்லாத சந்தோஷ் தனது மனைவி சுபாஷினியுடன் உறவினர் வீட்டில் வசிதது வருகிறார். இதற்கு முன்பு ஒரு டீ கடையில் வேலை பார்த்துள்ளார்.
லாட்டரி மூலம் கிடைத்த பணத்தில் சொந்த வீடு கட்ட தீர்மானித்துள்ளார். டிக்கெட்டை வீட்டில் பாதுகாப்பாக வைக்க முடியாது என்பதால் மூவாற்றுபுழா போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் லாட்டரி டிக்கெட்டை ஓப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications