நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம்.. கும்பலில் மேலும் ஒரு குற்றவாளியை தூக்கிய காவல்துறை
இம்பால்: மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து கும்பல் பலாத்காரம் செய்த நிலையில் அந்த வீடியோவில் இருந்த மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக மெய்தி சமுதாயத்தினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மே 4 ஆம் தேதி குகி சமூகத்தினரின் வீட்டை எரித்த மெய்தி சமூகத்தின் உள்ளே இருந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்து கும்பலாக பலாத்காரம் செய்தனர். இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் கொடூரமாக கொன்றனர்.

77 நாட்கள் கழித்து இந்த சம்பவத்தில் வீடியோ நேற்று இரவு வெளியாகி சமூக வலைதளத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்தார்.
தனது கடமையை செய்யும்: அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது; என் இதயம் கோபம் நிரம்பி வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது." என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இச்சம்பவம் நடந்து 78 நாட்கள் கழித்து குற்றத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பலில் ஒருவரை கண்டுபிடித்து இருப்பதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்தது. அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோவில், பச்சை டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் , பெண்ணை ஆடைகள் இன்றி அழைத்து செல்வது பதிவாகியிருக்கும்.

4 பேர் கைது: அந்த பச்சை சட்டை அணிந்த நபரை இன்று காலை மணிப்பூர் போலீஸ் கைது செய்தது. 32 வயதான அந்த இளைஞரின் பெயர் ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தி. சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சியை ஆய்வு செய்த போலீசார், அது ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தி என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் நாட்டை உலுக்கிய மணிப்பூர் சம்பவத்தில் இதுவரை கைது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications