வெடித்ததா போர்? மாறிமாறி ஏவுகணை தாக்குதல்.. இந்தியா - பாகிஸ்தான் மோசமான மோதல் - பதற்றம்
ஜம்மு காஷ்மீர்: நம் மீது பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் ட்ரோனை வைத்து தாக்கி வந்த பாகிஸ்தான் இப்பேது ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதற்கு நம் நாடும் ஏவுகணையை பயன்படுத்த தொடங்கி உள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஒரே நேரத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்று வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை, ட்ரோன்கள், போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதையடுத்து நேற்று இரவு முதல் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் கிராமங்கள், குடியிருப்புகள், விமான நிலையங்கள், ராணுவ முகாம்களை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியது.
மொத்தம் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோனை அனுப்பியது. இந்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதையடுத்து இன்று காலையில் ஜம்மு காஷ்மீர் அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ட்ரோன் ஏவுதளத்தை நம் நாடு அழித்த நிலையில் இப்போது பாகிஸ்தான் ஏவுகணையை கையில் எடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக நம் நாடும் ஏவுகணையை கையில் எடுத்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி எல்லையில் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளதால் போர் பதற்றம் என்பது அதிதீவிரமாகி உள்ளது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications