இதை மோசமான பாலியல் குற்றம் இல்லை என்கிறார் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி!!
அலகாபாத்; 18 வயது நிரம்பாத மைனர் ஒருவருடன் வாய்வழி உடலுறவு கொள்ள வற்புறுத்துவது மோசமான பாலியல் குற்ற பிரிவின் கீழ் வராது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில ஜான்சி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அந்த சிறுவனிடம் வாய்வழி உடலுறவு கொண்டு இருக்கிறார்.
அதோடு சிறுவனுக்கு 20 ரூபாய் பணம் கொடுத்து இதை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

வழக்கு
சிறுவனின் குடும்பத்தாருக்கு இந்த சம்பவம் தெரிந்த நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அலகாபாத் கீழமை கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் இது கடுமையான பாலியல் குற்றம் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

தீர்ப்பு
இதை எதிர்த்து அந்த நபர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அணில் குமார் ஓஜா இந்த வழக்கை விசாரித்த நிலையில் நேற்று இதில் தீர்ப்பு வழங்கினார். அதில் இந்த வழக்கு மோசமான பாலியல் குற்றம் கிடையாது. இந்த வழக்கில் குற்றவாளி மைனருடன் வாய்வழி உடலுறவு கொண்டு இருக்கிறார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
இது உட்செலுத்துதல் வகை பாலியல் உறவில் சேரும். அதை கடுமையாக பிரிவான Section 5/6, Section 9 கீழ் சேர்க்க முடியாது. மைனருடன் வாய்வழி உடலுறவு கொள்வதை மோசமான பாலியல் குற்றத்தின் கீழ் சேர்க்க முடியாது. எனவே இதற்கு Section 5/6, Section 9 ன் கீழ் 10 ஆண்டுகள் தண்டனை கொடுக்க முடியாது.

குற்றம் இல்லை
மாறாக 7 ஆண்டுகள் மட்டுமே தண்டனை கொடுக்க முடியும் என்று கூறி குற்றவாளியின் தண்டனையை 7 ஆண்டுகளாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அணில் குமார் குறைத்துள்ளார். இந்த தீர்ப்பிற்கு சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

போக்ஸோ சட்டம்
முன்னதாக ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தால் அது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிப்பது போல சட்டம் இருக்க கூடாது.

சர்ச்சை
உடை மீது தொட்டாலும் அது பாலியல் சீண்டல்தான். பாலியல் ரீதியாக உடலில் எப்படி தொட்டாலும் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும். உடைக்கு மீது தொட்டாலும் ஒரே நோக்கம்தான். இதில் சட்ட ரீதியாக மாற்றம் செய்ய முடியாது. இதனால் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில் கண்டித்து இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது இன்னொரு போக்ஸோ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications