பெங்களூரில் இயக்கப்படும் பிற மாநில வாகனங்கள் மீது இனி போலீஸ் கெடுபிடி குறையும்
பெங்களூர்: பிற மாநில வாகனங்களை ஒரு மாதத்திற்கு மேல் கர்நாடகாவில் இயக்கினால் இம்மாநிலத்தில் ஆயுட்கால வரி செலுத்த வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இனிமேல் பழையபடி அதிகபட்சம் ஓராண்டுவரை ஆயுட்கால வரியை கர்நாடக அரசுக்கு செலுத்தாமலே வாகனங்களை இயக்க முடியும்.
பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பல நகரங்களுக்கும் தொழில் மற்றும் பணி நிமித்தமாக தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். சிலர் குறுகிய காலத்திற்கு அங்கேயே தங்குகிறார்கள்.

இதுபோன்றோர் தங்கள் சொந்த மாநிலங்களில் இருந்து தங்களின் பைக் அல்லது கார்களை கொண்டுவந்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், 30 நாட்களுக்கு மேல் பிற மாநில வாகனங்கள் இயக்கப்பட்டால், ஆயுட்கால வரியை கர்நாடக போக்குவரத்து துறையிடம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. சட்டத்தில் திருத்தமும் கொண்டுவந்தது.
இதுகுறித்து ஹைகோர்ட்டில் நடைபெற்ற பொது நல வழக்கில், கர்நாடக அரசின் உத்தரவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே பழைபடி இனிமேல் அதிகபட்சம் ஓராண்டுவரை கர்நாடகாவில் ஆயுட்கால வரி செலுத்தாமல் பிற மாநில வாகனங்களை இயக்கிக்கொள்ள முடியும் நிலை உருவாகியுள்ளது.
இது பெங்களூர் நகரத்தில் தங்கி பணியாற்றும் தமிழக சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பல துறை பணியாளர்களுக்கு பலனளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications