கொல்கத்தா கொடூரம்.. மருத்துவர்களுக்கு தனி சட்டம்! பத்ம விருது பெற்ற மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்
டெல்லி: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து, மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை கையாள சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று, பத்ம விருதுகளை பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டது.

இதில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த வழக்கு நியமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 9 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர். போராட்டம் காரணமாக இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இப்படி இருக்கையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கம், டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் நோயாளிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
அதேபோல கொலை சம்பவம் குறித்து, சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், “மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், இதனால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த பகுதியை புனரமைத்து வருகின்றனர். இது ஆதரங்களை அழிப்பது போன்றதாகும். அதேபோல மேற்குவங்க காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது” என்று ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோண்ட்குப் மற்றும் மேற்கு வங்க மாநில சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சோமா சவுத்ரி ஆகியோர் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பத்ம விருதுகளை பெற்ற மருத்துவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதற்கான சிறப்புச் சட்டத்தை விரைவாக இயற்றவும், மருத்துவ வசதிகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்தவும் கோரியுள்ளனர்.
மேலும், “கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையுடன், பத்ம விருது பெற்ற மருத்துவர்களான நாங்கள் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறோம். இத்தகைய மிருகத்தனமான செயல்கள் மருத்துவ வல்லுநர்களின் சேவையின் அடித்தளத்தையே உலுக்கிவிடுவதாக இருக்கிறது. பெண்கள், சிறுமிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தீர்க்க வேண்டிய அவசரத் தேவையை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.
நாட்டின் தலைவர் என்ற முறையில், இந்த ஆபத்தான சூழ்நிலையைத் தீர்க்க உங்கள் உடனடி மற்றும் தனிப்பட்ட தலையீட்டை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர். ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவ், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா, புகழ்பெற்ற மருத்துவர்களான அசோக் வைத், ஹர்ஷ் மகாஜன், அனூப் மிஸ்ரா, ஏ.கே. குரோவர், அல்கா கிரிப்லானி மற்றும் மொஹ்சின் வாலி ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications