விராட் கோஹ்லி, சாக்ஷி மாலிக், மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது.. பிரணாப் வழங்கினார்
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, சாக்ஷி மாலிக், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு பதமஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.
அதன்படி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, தீபா மாலிக், தீபா கர்மாகர், சாக்ஷி மலிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. கண்பார்வையற்றோருக்கான கிரிக்கெட் வீரர் சேகர் நாயக்கிற்கும் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications