நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு பத்ம விபூஷண்- மாஜி சிஏஜி வினோத் ராய்க்கு பத்மபூஷண் விருது!
டெல்லி: நடிகர் ரஜினாகாந்த், வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு பத்மவிபூஷண் விருதுகளை அறிவித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்த முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய்க்கு பத்மபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்துக்கு முன்பாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது நடைமுறை.
நடப்பாண்டு நடிகர் ரஜினிகாந்த், வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஊடக அதிபர் ராமோஜிராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், திருபாய் அம்பானி ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுபம் கெர், உதித் நாராயணன், சாய்னா நேவால், சானியா மிர்சா, முன்னாள் சிஏஜி வினோத் ராய் ஆகியோருக்கு பத்மபூஷண் விருதும் நடிகர் அஜய்தேவ் கான், தேவ் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
மாஜி சிஏஜி வினோத்ராய் அளித்த அறிக்கையில்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடியால் ரூ1,76,000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் சிறைக்கு போக நேரிட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், திமுக படுதோல்வி அடையவும் காரணமாக இருந்தது இந்த அறிக்கைதான். ஆனால் நீதிமன்றத்தில் இத்தனை லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்றெல்லாம் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications