உச்சகட்ட பதற்றம்: பதிலடி கொடுக்கும் இந்தியா.. காஷ்மீர் விரையும் ராணுவ தலைமை தளபதி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், பல்வேறு தடை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பதற்றமான இந்த சூழலில், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று செல்கிறார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பஹல்காமில் உள்ள புல்மேடு சுற்றுலாத் தலத்துக்குள் 4 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கியால் சுட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை வேட்டையாடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், நமது பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. சந்தேகத்திற்கிடமான இடத்தை நமது ராணுவத்தினர் நெருங்கிய நிலையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த துப்பாக்கிச்சூடு மோதல் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் பசந்த்நகர் பகுதியில் நமது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலின் போது ஒரு ராணுவ வீரர் காயமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த பதற்றமான சூழலுக்கு நடுவே, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று செல்கிறார். தாக்குதல் நடத்தப்பட்ட இடமான பஹல்காமை தலைமை தளபதி உபேந்திரா திவேதி பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சக்கட்ட பதற்றத்துக்கு இடையே ராணுவத் தளபதியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications