பஹல்காமில் கை வைத்த தீவிரவாதிகள்.. பதற வைத்த இந்தியா.. பணிந்த பாக்.! பாரத தாய் தலையில் மகுடம்
டெல்லி: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது, நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.
ஏப்ரல் 22, 2025: பஹல்காம் தாக்குதல். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.

ஏப்ரல் 23, 2025: தாக்குதலுக்கு பல நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தன. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என மறுத்தார்.
இந்த தருணத்தில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்திய நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. மேலும், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரையும் இந்தியா நிறுத்தியது.
ஏப்ரல் 24, 2025: இந்திய உளவுத்துறை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக அடையாளம் கண்டது. இதனை அடுத்து எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் தீவிர கண்காணிப்பு தொடங்கியது.
ஏப்ரல் 28, 2025: தேசிய புலனாய்வு முகமை பஹல்காம் தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது. 5 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் தீவிரவாதிகள் உதவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மே 1, 2025: பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா ராணுவ நடவடிக்கை திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி எச்சரித்தது. பிரதமர் நரேந்திர மோடி, "குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்" என அறிவித்தார்.
மே 5, 2025: இந்திய உள்துறை அமைச்சகம், நாட்டின் 244 மாவட்டங்களில் போர்க்கால ஒத்திகைகளை நடத்த உத்தரவிட்டது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளைப் பயிற்சி செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மே 7, 2025: இந்தியா, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ரஃபேல் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், ஸ்கால்ப் ஏவுகணைகள், மற்றும் ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள். பாகிஸ்தான் இந்தத் தாக்குதலில் 7 பொதுமக்கள், உட்பட 2 குழந்தைகள், கொல்லப்பட்டதாகக் கூறியது.
மே 8, 2025:
பாகிஸ்தான், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய எல்லையில் குண்டுவீச்சு நடத்தியதாகவும், இதில் 8-10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம், பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் தாக்கப்படவில்லை, தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டது.
மே 9, 2025: இந்திய ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியது. முழு அளவிலான போர் இல்லை என்றாலும், எல்லையில் பதற்றம் தொடர்கிறது.
மே 10, 2025: இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, இரு நாடுகளும் போர் நிறுத்ததிற்கு ஒப்பு கொண்டதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications