நடிகர் அனுபம் கெருக்கு விசா வழங்க மறுப்பு... இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசால் பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் பாலிவுட் நடிகர் அனுபம் கெர். இவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வரும் வெள்ளியன்று நடைபெறும் இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்க உள்ளார்.
அனுபம் கெருடன் 18 இந்திய பிரபலங்களை இந்த விழாவில் பங்கேற்குமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அனுபம் கெர்...
இந்நிலையில், அந்த இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள சிறப்பு அழைப்பாளர்களில் 17 பேருக்கு விசா வழங்கியுள்ள பாகிஸ்தான் அரசு, நடிகர் அனுபம் கெருக்கு மட்டும் விசா வழங்க மறுத்து விட்டது.

பாகிஸ்தான் கலைஞர்கள்...
இதுதொடர்பாக, அனுபம் கெர் கூறுகையில், ‘பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த நாம் அழைப்பு விடுக்கிறோம். ஒரு இடத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், சில இடங்களில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நம் நாட்டு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

நம்பிக்கை வீணானது...
இதேபோல், கராச்சி இலக்கிய விழாவில் பங்கேற்று அங்குள்ள மக்கள் மனதில் இந்தியர்களைப் பற்றி பதிந்துள்ள தவறான அபிப்ராயங்களை நீக்கலாம் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை வீணாகி விட்டது' எனத் தெரிவித்துள்ளார்.

காரணம் தெரியவில்லை...
மேலும், தனக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு காரணம் தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை நான் காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்தவன் என்பதாலோ, அல்லது, சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான எனது மாறுபட்ட கருத்துகளுக்காகவோ என்னை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க அவர்கள் மறுத்திருக்கலாம்' என்கிறார்.

அதிர்ச்சி...
அனுபம் கெருக்கு பாகிஸ்தான் விசா அளிக்க மறுத்தது இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுப்பு...
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ‘அனுபம் கெர் விசா விண்ணப்பத்தினை தாக்கல் செய்யவே இல்லை. ஒருவேளை விசா விண்ணப்பித்துள்ளது தொடர்பாக ஏதேனும் ரசீது பெற்றுள்ளாரா என்று சரிபார்த்து கொள்ளவும்' என பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மன்சூர் அலி தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications