இந்த அவமானம் தேவையா? தொடர்ந்து பொய்யை பரப்பிய பாகிஸ்தான்.. வெளிச்சம் போட்டு காட்டிய இந்தியா
ஜெய்ப்பூர்: இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் துருக்கி நாட்டின் ட்ரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும் இந்தியா தன்னுடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குண்டுகள் தாக்குவதற்கு முன்பே ஆகாயத்தில் வழிமறித்து அழித்து வருகிறது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள பாகிஸ்தான் நாம் ஒன்றுமே இந்தியாவை செய்ய முடியவில்லையே என்ற விரக்தியில் இருக்கிறது.

இந்த சூழலில் தான் பாகிஸ்தான் பொய் என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறது. அதாவது, இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக பாகிஸ்தான் பொய் செய்திகளை பரப்பி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்துவிட்டதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் பொய் செய்திகளை பரப்பியது.
இதனை நம்பி சில சர்வதேச செய்தி நிறுவனங்களும் அதனை பதிவிட்டு இருந்தது. இந்த நிலையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என இந்தியா ஆதாரத்துடன் மறுத்து இருக்கிறது. முதலில் இது குறித்து சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ள ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர், ஜெய்ப்பூர் விமான நிலையம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் எந்த ஒரு தாக்குதலும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் விமானங்கள் வழக்கம் போல் சென்று கொண்டு தான் இருக்கிறது என்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஜெய்ப்பூர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவும் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தியை ஆதாரத்துடன் மறுத்து இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் நாட்டில் ஏங்கும் பல x தள கணக்குகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி அழித்திருப்பதாக பொய் செய்திகளை பரப்பி வருகிறது.
அதனை அனைத்தும் பொய் என்று PTI யை நிறுவன சரி பார்த்து குழுவும் வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் இயங்கும் ஒரு கணக்கு சென்னை துறைமுகத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திருப்பதாக குபீர் காமெடியை செய்து இருக்கிறது. இந்த செய்தி எல்லாம் நம்பி பாகிஸ்தான் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் இந்தியர்கள் பதிலடி கொடுத்த வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications