இப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்
அகமதாபாத்: பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சூரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானியர் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு
தொடர்ந்து அவர்கள் எல்லை கோட்டு பகுதி வழியாக வந்தால் அவர்களை திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரித்தார். சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள்.

உரிமை மீறல்கள்
தற்போதும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். மக்களை நாம் ஜாதி, மத, பேத அடிப்படையில் பிரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல்கள் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன.

பாகிஸ்தான்
பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டுகளாக சிதறிவிடும் என்றார்.

10 பயங்கரவாதிகள்
காஷ்மீர் பிரச்சினைக்கு பிறகு இந்தியாவில் தாக்குதலை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு ராணுவத்தினர் அவ்வப்போது இந்திய எல்லையில் ஊடுருவுகின்றனர். இவ்வாறு ஊடுருவி 10 பயங்கரவாதிகளை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அனுப்ப திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications