"பாகிஸ்தான் 4 துண்டுகளாக போய் இருக்கும்.." நேரடியாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடுத்த எச்சரிக்கை!
கோவா: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து முப்படை தளங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று பாராட்டி வருகிறார். அதன்படி ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று கடற்படை வீரர்களுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது கடற்படையின் திறமையைப் பாராட்டிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் இப்போது அரபிக் கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த கப்பலுக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், கப்பலின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும், அந்த கப்பலிலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சிறிது நேரம் பயணித்தார்.

ராஜ்நாத் சிங்
அப்போது அவர் கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் இந்தியக் கடற்படையின் வலிமை குறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சிந்தூர் நடவடிக்கையின் போது கடற்படை முழு வீச்சில் இயங்கிச் செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் 1971 போரில் சந்தித்ததை விட பாதிப்பைச் சந்தித்திருக்கும் என்றும் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாகச் சிதறிப் போய் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
4 துண்டுகளாகச் சிதறி இருக்கும்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் பேசுகையில், "கடந்த 1971ல் இந்தியக் கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கியது. அப்போது பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாக (பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததைக் குறிப்பிடுகிறார்) பிரிந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியக் கடற்படை முழு வீச்சில் இறங்கி இருந்தால்.. பாகிஸ்தான் 2ஆக இல்லை நான்கு பகுதிகளாகப் போய் இருக்கும்.
கடற்படைக்குப் பாராட்டு
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இலங்களை இந்தியக் கடற்படை சத்தமில்லாமல் நெருங்கியது. இந்தியக் கடற்படை பங்கை நாம் பாராட்டியே தீர வேண்டும். அவர்களின் ஆக்ரோஷமான நிலைப்பாடு, ஆதிக்கம் மற்றும் தயார்நிலை ஆகியவை பாகிஸ்தானுக்குச் சவால் விடுக்கும் வகையில் இருந்தது. இதனால் பாகிஸ்தான் கடற்படை கப்பல்களால் அவர்களின் கரையைக் கூட தாண்ட முடியவில்லை.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியக் கடற்படை அதன் அமைதியான சேவையால் ஒவ்வொரு இந்தியரையும் கவர்ந்துள்ளது. அமைதியாக இருந்தபோதிலும், பாகிஸ்தான் ராணுவத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியக் கடற்படை வெற்றி பெற்றது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கடற்படையின் பங்கு மகத்தானது.
துணிச்சலே இல்லாமல் போனது
ஆபரேஷன் சிந்தூர் போது, விமானப்படை பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத தளங்களை அழித்தபோது.. அரபிக் கடலில் நமது கடற்படை ஆக்ரோஷமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது. இது பாகிஸ்தான் கப்பல்களை அதன் கடற்கரைகளிலேயே கட்டிப்போட்டது. கடலுக்கு வரும் துணிச்சல் கூட பாகிஸ்தானுக்கு இல்லாமல் போனது.
கடலில் நிலைநிறுத்தப்பட்ட நமது கப்பல்கள் உடனடியாக வெறும் 96 மணி நேரத்திற்குள் கடற்படை தீவிரமாக ரோந்து பணிகளை ஆரம்பித்தன. இது மது கடற்படை எந்தளவுக்குத் தயார் நிலையில் இருக்கிறது என்பதையே காட்டுவதாக உள்ளது. நீண்ட தூரம் சென்று எதிரிகளை காலி செய்யும் அளவுக்கு நாம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை இது காட்டுகிறது.
அஞ்சி நடுங்கிய பாகிஸ்தான்
நாம் இந்தளவுக்குத் தயார் நிலையில் இருந்ததை பார்த்தே பாகிஸ்தான் பயந்துவிட்டது. அதைத் தாண்டி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அவசியமில்லாமல் போய்விட்டது. நமது இந்த நடவடிக்கையால் எதிரிகள் திகைத்துப் போனார்கள். இந்தியக் கடற்படையின் மகத்தான சக்தி, அதன் புத்திசாலித்தனம் மற்றும் திறன்களைப் பார்த்து பாகிஸ்தான் பயந்து போய்விட்டது.. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆபரேஷன் சிந்தூரில் நமது கடற்படை முழுமையாக இறங்காததாலேயே பாகிஸ்தான் தப்பித்தது" என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியக் கடற்படை எடுத்த நடவடிக்கைகளையும் அவர் பாராட்டிப் பேசினார். மேலும், வரும் காலங்களில் எல்லையில் எதாவது பதற்றம் ஏற்பட்டால் அதைக் கையாளவும் திறம்பட எதிர்கொள்ளவும் எப்போதும் இதேபோல தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
-
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications