நாசவேலைக்கு சதியா? ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாக். மீன்பிடி படகு..சுற்றி வளைத்த இந்திய கடற்படை
அகமதாபாத்: இந்திய கடல் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை சுற்றி வளைத்த இந்திய கடற்படை படகில் இருந்த 10 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏதேனும் நாச வேலை சதித்திட்டத்துடன் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு நுழைந்ததா என்ற கோணத்திலும் குஜராத் பயங்கராவத தடுப்பு பிரிவு மற்றும் கடல்படை அடங்கிய பாதுகாப்பு குழு விசாரணை நடத்துவதாக தெரிகிறது.
அரபிக்கடலில் இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் முயற்சியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சில கும்பல்கள் அடிக்கடி முயற்சித்து வருகின்றன.

இந்திய கடலோர காவல்படை
இதுபோன்ற சட்ட விரோத செயல்களை கண்காணிக்க இந்திய கடற்படையும் அரபிக்கடலில் உள்ள இந்திய கடற்பரப்பில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அரபிக்கடல் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் மீனவர்களும் அத்துமீறி நுழைந்து விடுகின்றனர். அவர்களையும் இந்திய கடலோர காவல் படை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல போதைப்பொருள் கும்பலும் ஆயுதக்கடத்திலில் ஈடுபடும் நபர்களும் இந்திய எல்லைக்குள் மீன்பிடி படகுகளில் ஊடுருவ முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீன் பிடி படகு
அந்த வகையில் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி பாகிஸ்தான் மீன் பிடி படகு ஒன்று நுழைந்தது. இதைக் கவனித்த குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் அடங்கிய சிறப்பு குழு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகை சுற்றி வளைத்தது. இந்தப் படகில் பயங்க வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.

10 பேரிடம் விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என்று கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். பாகிஸ்தான் படகில் இருந்த 10 பேரையும் கைது செய்துள்ள இந்திய கடலோர காவல் படை, விரிவான விசாரணைக்காக ஒகா பகுதிக்கு படகை இழுத்து வந்தனர். ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்த 10 பேரிடம் விசாரணை நடப்பதாக தெரிகிறது. விசார போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறியடிக்கும் முயற்சியில்..
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 முறை இதுபோல கடத்தல் முயற்சிகள் நடைபெற்று இருப்பதாக கடலோர பாதுகாப்பு வட்டாரங்கள் சொல்கின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 3-வது முறையாக இதுபோன்ற போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்குள் ட்ரோன் மூலமாக ஒருபக்கம் போதைப்பொருளை கடத்த முயற்சிக்கும் பாகிஸ்தான் மற்றொரு பக்கம் கடல் பகுதி வழியாகவும் கடத்தி கொண்டு வர போதைபொருள் கும்பல்கள் முயற்சித்து வருகின்றன. இந்த கும்பல்களின் முயற்சியை எல்லை பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications