நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் மும்முரம்!!
டெல்லி: நடப்பு நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை பல கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளுமே வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.
காங்கிரஸ், பாரதிய ஜனதா இல்லாமல் இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் உள்பட 14 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியையும் உருவாக்கி உள்ளன. இந் நிலையில் நடப்பு 15-வது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.

நாளை தொடங்கி வரும் 21-ந்தேதி வரை 5 அமர்வுகளாக இக்கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடரை அமைதியாக நடத்துவதற்காக மத்திய அமைச்சர் கமல்நாத் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
இறுதி கூட்டத்தொடரில் மொத்தம் 39 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கானா, ஹெலிகாப்டர் பேர ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications