ஓடும் ரயிலில் குழந்தை பெற்ற பெண்... உதவிக்கு வராமல் வேடிக்கை பார்த்த பயணிகள்.. மும்பையில்!
மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் அழகிய குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பெண் ஒருவர். ஆனால், வலியால் துடித்த அவருக்கு உதவி செய்யாமல் மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கல்யாண் பகுதியில் மாலை 3.30 மணியளவில் ரயிலில் ஏறியுள்ளனர் ராம்லால் பால் என்பவரும், அவரது மனைவி சுதேவியும். நிறைமாதக் கர்ப்பிணியான சுதேவியை கே இ எம் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதிக்க அவர்கள் புறப்பட்டுள்ளனர்.

ஆனால், ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. வலியால் துடித்த அப்பெண்ணிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. சில பெண்கள் உட்பட அனைவரும் அதனை வேடிக்கைப் பார்த்துள்ளனர்.
இதனால் ஓடும் ரயிலிலேயே சுதேவிக்கு அழகிய குழந்தை பிறந்தது. குழந்தையை கையில் ஏந்தியபடி செய்வதறியாது திகைத்துள்ளார் ராம்லால். அப்போதும் யாரும் அவருக்கு உதவவில்லை.
இந்நிலையில், அதே பெட்டியில் பயணம் செய்த பத்திரிகையாளர் இக்பால் அன்சாரி, இது தொடர்பாக தகவல் அறிந்து ராம்பால் அருகே வந்துள்ளார். நிலைமையைப் புரிந்து கொண்டு உடனடியாக ரயில்வேயின் அவசர எண்ணை அழைத்துள்ளார். முதல் எண் கிடைக்காத நிலையில், இரண்டாம் எண்ணில் தொடர்பு கிடைத்துள்ளது.
உடனடியாக அங்குள்ள நிலையை அவர் விளக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து அடுத்துள்ள கஞ்சுர்மார்க் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படியே, அடுத்து வந்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு மருத்துவக் குழு தயாராக இருந்தது. உடனடியாக சுதேவி ராஜவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவைப் பார்த்ததும் சில பயணிகள் சுதேவியை ஸ்டெச்சரில் ஏற்ற உதவி செய்துள்ளனர்.
தற்போது சுதேவியும், குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இருவரும் நலமாக இருப்பதாகவும் ராம்பால் தெரிவித்துள்ளார். மேலும், தக்க சமயத்தில் உதவி செய்த பத்திரிகையாளர் அன்சாரிக்கும் அவர் நன்றித் தெரிவித்துள்ளார்.
ஒடும் பேருந்தில் பலாத்காரம் நடந்தால் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்றால், பிரசவம் நடந்தால் கூட உதவ மறுக்கிறார்கள் நம் மக்கள். மக்கள் மனது அந்தளவிற்கு மரத்துப் போய் விட்டதா என்றே கேட்கத் தோன்றுகிறது இத்தகைய சம்பவங்களைப் பார்க்கும் போது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications