அய்யய்யோ...நான் நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிராக பேசவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்

Subscribe to Oneindia Tamil

ஹரித்வார்: நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என யோகா குரு பாபா ராம்தேவ் பேசவே இல்லை என அவரது சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

யோகா குரு என அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ், ஹரித்வாரை தலைமையிடமாக கொண்டு பதஞ்சலி எனும் ஆயுர் வேத நிறுவனத்தை நடத்தியும் வருகிறார். கொரோனாவுக்கு கொரோனில் என ஒரு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியிட்டவர் ராம்தேவ்.

ஆனால் ராம்தேவின் கொரோனில், நோய் எதிர்ப்பு சக்திக்குரியதுதான்; கொரோனாவுக்கான மருந்து அல்ல என மத்திய அரசு குட்டு வைத்தது. ஆனாலு வெளிநாடுகளில் கொரோனில், கொரோனா எதிர்ப்பு மருந்துதான் என விற்பனை செய்தது ராம்தேவின் பதஞ்சலி நிறுனம்.

அண்மையில் ஹரித்வாரில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்றை தொடங்கி இருப்பதாக படோபடமாக அறிவித்தார் ராம்தே. அலோபதி, ஆயுர்வேதம் இரண்டும் கலந்த சிகிச்சை, கொரோனாவுக்கு தரப்படுகிறது எனவும் தம்பட்டம் அடித்தார் ராம்தேவ்.

அடிப்படை வசதிகள் இல்லாத சிகிச்சை மையம்

அடிப்படை வசதிகள் இல்லாத சிகிச்சை மையம்

ஆனால் ஹரித்வாரில் ராம்தேவ் உருவாக்கியதாக சொல்லப்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் ஆயுர்வேதத்தின் பெயரால் சிகிச்சை தரப்படுகிறது; ஆனால் இந்த சிகிச்சை மையத்தில் குடிநீர்கூட இல்லை; ஆக்சிஜன் வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவு எதுவும் இல்லை என்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருந்தன.

அலோபதி முட்டாள்தனமானது

அலோபதி முட்டாள்தனமானது

இந்நிலையில் ஹரித்வாரில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது; கொரோனா மரணங்களுக்கு அலோபதி எனப்படும் அறிவியல் மருத்துவம்தான் காரணம் என சகட்டுமேனிக்கு விமர்சித்திருந்தார். இந்த விமர்சனங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மருத்துவர் சங்கம் கண்டனம்

மருத்துவர் சங்கம் கண்டனம்

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு, ராம்தேவ் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. அத்துடன் ராம்தேவின் கருத்துக்கு விளக்கம் கேட்டு சட்டரீதியாக நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது.

ராம்தேவ் அந்தர் பல்டி

ராம்தேவ் அந்தர் பல்டி

இப்போது ராம்தேவின் பதஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நவீன அறிவியல் மருத்துவத்தை ராம்தேவ் விமர்சிக்கவே இல்லை. அவர் தெரிவித்த கருத்துகள் அனைத்துமே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என சமாளிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது! அடேங்கப்பா அந்தர்பல்டி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+