For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாட்னா குண்டுவெடிப்பு.. இந்தியன் முஜாஹிதீன் பயன்படுத்திய சங்கேதப் பெயர் ‘மச்லி 5’

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பாட்னா குண்டுவெடிப்பில் நரேந்திர மோடியைக் கொல்ல மனித வெடிகுண்டு அனுப்பப்பட்டதாகவும், இத்தாக்குதலுக்கான சங்கேத மொழிக் குறியீடாக ‘மச்லி 5' என வைக்கப்பட்டதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிறன்று பாட்னாவில் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி சதிகாரர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். காயமடைந்த 80க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி இம்தியாஸ் அன்சாரி மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட அந்த நடவடிக்கைக்கு இந்தியன் முஜாகிதீன் 'மச்லி 5' என்று சங்கேத மொழியை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளான்.

மேலும், 18 மனித வெடிகுண்டுகளைத் கொண்டு ஞாயிறன்று மோடியை தாக்க திட்டமிட்டதாகவும், பாட்னாவில் காந்தி மைதானத்தை சுற்றிலும் 18 குண்டுகள் வைக்கப் பட்டதாகவும், அதன் மூலம் பெரும் நெரிசலை ஏற்படுத்தி பலி எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டதாகவும் சதிகாரர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மச்லி 5-க்காக தேர்வு செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு போதிய பயிற்சி இல்லாததே இத்திட்டம் தோல்வியில் முடிந்ததன் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீனின் இணை நிறுவனர் யாசின் பட்கல் ஏற்கனவே அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் ஹிட் லிஸ்டில் நரேந்திர மோடி இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இம்தியாஸ் அன்சாரி, நரேந்திர மோடி மீது மிகவும் வெறுப்புணர்வுடன் இருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

English summary
Gujarat Chief Minister Narendra Modi was also one of the targets of the Patna serial blasts, according to sources. Modi will visit Patna on November 2 to meet the families of the blast victims. Sources say the code word being used for Modi was Machli (fish) 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X