For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நார் நூடுல்ஸை வாபஸ் பெறும் இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் சீன வகை நார் நூடுல்ஸ் மார்க்கெட்டில் இருந்து வாபஸ் பெறப்படுகிறது.

இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சீன வகை நார் நூடுல்ஸில் ஈயம் உள்ளிட்டவை அளவுக்கு அதிகமாக உள்ளதா என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஆய்வு செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. நார் நூடுல்ஸ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உணவு பொருட்கள் பட்டியலில் இல்லை.

Pending approval from FSSAI, HUL withdraws Knorr noodles

இதையடுத்து நார் நூடுல்ஸை வாபஸ் பெற இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சீன வகையான நார் நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்க இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள நார் நூடுல்ஸை வாபஸ் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார் நூடுல்ஸுக்கு அங்கீகாரம் அளிக்குமாறு இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

முன்னதாக மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம், மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸை நெஸ்லே நிறுவனம் வாபஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
FMCG major Hindustan Unilever Limited (HUL) has decided to recall its Chinese range of 'Knorr' instant noodles from the market pending product approval from the central food safety regulator FSSAI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X