"மணி ஹெய்ஸ்ட்" சம்பவம்.. பண மழையை பொழிந்த மர்ம நபர்! நம் நாட்டில்தான்.. அருகே உள்ள வங்கிகள் பத்திரம்
ஜெய்ப்பூர்: மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் வருவதைப் போல திடீரென ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் பண மழை பொழிந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2017இல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். முதலில் இந்த அங்குள்ள உள்ளூர் டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் இந்த சீரிஸை வெளியிட்டது. உடனடியாக இது தாறுமாறாக ஹிட் அடித்தது.

இதையடுத்து அடுத்தடுத்த சீசன்களை நெட்பிளிக்ஸ் நிறுவனமே தயாரித்தது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய ஹிட்டை கொடுத்த சீரிஸாக இது இருந்தது. நம்மில் பெரும்பாலானோர் மணி ஹெய்ஸ்ட் தொடரைப் பார்த்திருப்போம்.
பண மழை: அதில் பலர் வங்கிக்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளை அடித்துவிடுவார்கள். இதற்கு புரோபசர் இன்ச் இன்ச்சாக திட்டம் போட்டுச் கொடுத்து வழிநடத்துவார். இதற்கிடையே சீரிஸில் நடந்த அதே சம்பவம் இப்போது ரியல் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இது ஏதோ ஒரு மூலையில் நடந்ததாகக் கருத வேண்டாம். இந்தச் சம்பவம் நமது நாட்டில் தான் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காரில் வந்த அந்த நபர் திடீரென அதன் மீது ஏறி பணமழையை பொழிந்துள்ளார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஆடிப் போய்விட்டார்கள். மணி ஹெய்ஸ்ட் சீரியஸில் வருவதைப் போலவே முகத்தை மறைக்கும் மாஸ்க், சிவப்பு ஜம்ப்சூட் அணிந்த இந்த நபர் ஜெய்ப்பூரில் பண மழை பொழிந்தார். இந்த இன்ப அதிர்ச்சியைக் கண்டு வாயை பிளந்த அங்குள்ள மக்கள் பண மழையில் தங்களால் முடிந்த வரை பணத்தை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகினர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Money Heist in Rajasthan...😜
— Nitesh rathore (@niteshr813) October 3, 2023
A scene reminiscent of the popular web series ‘Money Heist’ unfolded on the streets of #Jaipur.#Rajasthan #Jaipur #JaipurViral #MoneyHeist2 #MONEY #viralvideo #India #Bharat pic.twitter.com/pUEMaxonU3
மணி ஹெய்ஸ்ட்: அந்த வீடியோவில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் மணி ஹெய்ஸ்ட் உடை அணிந்த அந்த நபர், காருக்கு மேல் ஏறி நின்று கொண்டு பண மழை பொழிகிறார். காரில் சிவப்பு ஜம்ப்சூட் உடை மற்றும் மாஸ்க் அணிந்த அந்த நபர் ரூ. 20 நோட்டுகளை அள்ளி வீசியுள்ளார். இதனால் அங்கே அவரை சுற்றி பொதுமக்கள் திரண்டனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் உள்ள பிரபல மால் கவுரவ் டவர் அருகே தான் பணத்தை அள்ளி வீசியுள்ளார். முதலில் அங்கே சென்றவர்கள் இது சினிமா ஷூட்டிங் என்றும் இது போலியான ரூபாய் நோட்டுகளாகவே இருக்கும் என நினைத்துள்ளனர். அப்போது ஒரு சிலர் அதை எடுத்து பார்க்கும் போதுதான் அது உண்மையான ரூபாய் நோட்டுகள் என்பது அவர்களுக்குத் தெரிந்துள்ளது.
ரியல் 20 ரூபாய் நோட்டு: அந்த வீடியோவிலும் கூட ஒருவர், அவர் உண்மையான 20 ரூபாய் நோட்டுகளைத் தான் போடுகிறார்" என கத்துவது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் பலரும் அங்கே ஒரே இடத்தில் குவிந்தனர். இப்படி பலரும் அங்கே பணம் எடுக்கக் குவிந்த நிலையில், அங்கே நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியது. இதையடுத்து அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அந்த மாஸ்க் நபரைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக இப்படிச் செய்தார்.. அது யாருடைய பணம் என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் வங்கிகளில் இருந்து கொள்ளையடித்து பணத்தை மக்களுக்கு வழங்குவார்கள். இதனால் நெட்டிசன்கள் சிலர் இவரும் வங்கியில் கொள்ளை அடித்திருக்கலாம் என்றும் அருகில் உள்ள வங்கிகள் பத்திரம் என்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications