500, 1000 விவகாரம்: லோக்சபாவுக்குள் முழக்கம்... கட்டிடத்திலிருந்து குதிக்க முயன்றவரால் பரபரப்பு!
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து லோக்சபா கட்டிடத்தில் குதிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு நடவடிக்கைக்கு எதிராக லோக்சபா கட்டிடத்தில் இருந்து குதிக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது; புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் என்ற மத்திய அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் நாடு முழுவதும் மக்களை விரக்திக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2 வார காலமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளுமே இந்த விவகாரத்தால் முடங்கிப் போயுள்ளன. ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி வரவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 28-ந் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் இன்று லோக்சபாவில் பார்வையாளர் ஒருவர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது, ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் லோக்சபா கட்டிடத்தில் இருந்தும் அவர் கீழே குதிக்க முயன்றார். அவரை பாதுகாவலர்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications