பெஷாவர் மாதிரியான மிருகத்தனத்தை பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை: பாதுகாப்பு ஆலோசகர்
டெல்லி: மக்கள் இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொள்வதை நான் இதுவரை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை என பெஷாவர் பள்ளி தாக்குதல் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் இது போன்று மனிதத்தன்மை இல்லாமல் கொடூரமாக நடந்து கொள்ள முடியும் என்பதை இதுவரை நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. விலங்குகள் போன்று நடந்து கொண்டுள்ளனர். கீழ்த்தரமாக அப்பாவி பள்ளிக் குழந்தைகளை கொன்றுள்ளனர். இது நம் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன்.
இந்த சம்பவத்தில் இருந்து இந்தியா என்ன பாடம் கற்றுக் கொண்டது என்ன என்ற கேள்விக்கே இடமில்லை. இது போன்ற சம்பவங்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றார்.
பெஷாவர் சம்பவம் பற்றி பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் தொலைபேசி மூலம் பேசி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications