பாஜக எம்.எல்.ஏவை உப்புமூட்டை போல சுமந்து சென்ற போலீஸ்காரர்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரி்ல் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரை அவரது பாதுகாவலர் ஒருவர் உப்புமூட்டை போல முதுகில் சுமந்து சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது. ஒரு ஓடையை, உடன் வந்தவர்கள் நடந்து கடந்தபோது இந்த எம்.எல்.ஏ மட்டும் போலீஸ்காரர் முதுகில் ஏறிக் கொண்டு கடந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த செயலை அந்த எம்.எல்.ஏ நியாயப்படுத்தியுள்ளார். தனக்கு உதவி செய்யவே அந்த போலீஸ்காரரை அரசு நியமித்திருப்பதாகவும் அவர் கூச்சப்படாமல் சொல்லியுள்ளார்.

அந்த எம்.எல்.ஏவின் பெயர் கிஷன் லால். சம்ப் என்ற சட்டசபைத் தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதில் அதிகார துஷ்பிரயோகம் என்று எதுவும் இல்லை. அரசுதான் அவரை எனக்கு உதவி செய்ய நியமித்துள்ளது. ஆற்றைக் கடக்க அவர் எனக்கு உதவினார். இதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார் கிஷன் லால்.
மேலும் அவர் கூறுகையில், இது கொத்தடிமைச் செயல் எல்லாம் இல்லை. நாங்கள் ஆற்றைக் கடந்தபோது ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டோம். அவர் என்னை குறிப்பிட்ட இடத்தில் முதுகில் ஏற்றி கடக்க உதவினார். நாங்கள் இருவருமே மக்களுக்காக சேவை செய்பவர்கள்தான். யாரும் யாருக்கும் எஜமானர் இல்லை. இது ஒரு உதவிதான் என்று கூறியுள்ளார் அவர்.
கிஷன்லால் மேலும் கூறுகையில் நான் இந்தப் பகுதி மக்களுக்காக பல காலமாக டாக்டராக சேவை செய்துள்ளேன். ஆற்றைப் பலமுறை கடந்துள்ளேன். ஆனால் இப்போது நான் எம்.எல்.ஏ என்பதாலும், எனக்கு உதவி செய்ய போலீஸ்காரர் நியமிக்கப்பட்டதாலும்தான் அவர் தனது கடமையைச் செய்தார் என்றார் கிஷன் லால்.
சரிதாங்!
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications