60 வயது மூதாட்டியை விரட்டி விரட்டி கடித்துக் குதறும் பன்றிகள்.. தீயாய் பரவும் வைரல் வீடியோ
60 வயது மூதாட்டியை வெறிப்பிடித்த பன்றிகள் 2 விரட்டி விரட்டி கடித்துக் குதறின. இதில் 60 வயது மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

நெல்லூர்: 60 வயது மூதாட்டியைப் பன்றிகள் 2 விரட்டி விரட்டிக் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவாலி நகரத்தில் இந்த கோரம் சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் 60 வயது பெண் ஜானி சாலையில் நடந்து வந்து செல்கிறார்.
அவரைத் துரத்திக் கொண்டு இரண்டு பன்றிகள் ஓடி வருகின்றன. மூதாட்டியை முட்டி சாலையில் தள்ளிய பன்றிகள், அவரைக் கடித்து குதறத் தொடங்குகின்றன.

பன்றிகளுடன் மூதாட்டி போராட்டம்
மூதாட்டியால் எழுந்திருக்கக் கூட முடியாமல் போராடுகிறார். சற்று நேரத்தில் பரபரப்பாக மாறிய அந்தச் சாலையில், பன்றிகளை சிலர் கல்லெறிந்து விரட்ட முயற்சிக்கின்றனர்.

தடி கொண்டு விரட்டி
அதனால் கொஞ்சம் ஜகா வாங்கி அந்தப் பக்கம் ஓடிய பன்றியிடம் இருந்து தப்பித்து எழுந்திருக்கும் ஜானியை மீண்டும் கவ்விக் கடிக்க பன்றிகள் ஒடி வருகின்றன. சம்பவ இடத்திற்கு 2 சக்கர வாகனத்தில் வரும் இரண்டு இளைஞர்கள் பெரிய தடி கொண்டு பன்றியை விரட்டுகின்றனர்.
வைரல் வீடியோ
இதில், இன்னும் சிலர் கல்லால் அடித்தும் துரத்தினர். பன்றி விலகியதும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஜானி நடக்க முயற்சி செய்கிறார். படுகாயம் அடைந்த அவரை மற்றொரு பெண் கைதாங்கலாக அழைத்துச் செல்கிறார். பதற வைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிகிச்சை
வெறி கொண்ட பன்றிகள் இந்தப் பாட்டியை மட்டுமல்லாமல் ஒரு சிறுவனையும் கடித்துக் குதறியுள்ளது. 3 வயதான கோட்டீஸ்வர ராவ் என்ற சிறுவனும், ஜானியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications