பஞ்சாப்பில் 5 கிராம மக்களை விரட்டி விரட்டி கடித்த 'பிட்புல் நாய்'.. 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி!
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் அடுத்தடுத்து ஒரே நாளில் 5 கிராமங்களில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி பிட்புல் நாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 12 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாய் இனங்களில் மிகவும் கொடூரமாக கருதப்படுவது பிட்புல் வகையை சேர்ந்த நாயேயாகும். இந்த நாய்கள் வீட்டுக்கு வரும் வெளியாட்களை கடித்து தாக்குவதுடன் சில நேரங்களில் வீட்டு எஜமானர்களையும் கடித்து விடுகிறது.
இதன் காரணமாகவும், இந்த நாய்கள் கடித்தால் மரணம் ஏற்படும் என்பதாலும், இந்த நாயை வளர்க்க பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக, கட்டுமஸ்தாக இருப்பதால் இந்த நாயை ஒருசிலர் வளர்க்க விரும்புகின்றனர்.

12 பேரை கடித்தது
அப்படி தான் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரில் யார் வீட்டில் இருந்தோ தப்பி வந்த பிட்புல் நாய் அங்குள்ள 5 கிராமங்களை சேர்ந்த 12 பேரை கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த 12 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சாப்பின் குர்தாஸ்பூரில் உள்ள டாங்கோ ஷா கிராமத்தில் தொடங்கி சுஹான் கிராமம் வரை 5 கிராமங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த பிட்புல் நாய் விரட்டி விரட்டி கடித்துள்ளது.

தொழிலாளர்கள் 2 பேர்
முதலில் டாங்கோ ஷா கிராமத்திற்குள் இருந்து தான் வந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள யாரோ ஒருவரது வீட்டில் இருந்து தான் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியுடன் அந்த நாய் வந்துள்ளது. அப்போது அந்த தெருவில் 2 தொழிலாளர்கள் நடந்து வந்ததை பார்த்த அந்த பிட்புல் நாய் சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் இருவரையும் பாய்ந்து பாய்ந்து கடிக்க தொடங்கியது. இருவரும் நாயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். எனினும் நாய் விடாமல் கடித்து தாக்க தொடங்கியது.

60 வயது நபர்
எனினும் அவர்கள் இருவரும் அந்த நாயின் கழுத்தில் இருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டு நாயை தாக்கி அடித்து விரட்டி விட்டனர். இதையடுத்து அந்த நாய் அருகில் உள்ள மற்றொரு கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு 60 வயதான நபரை வீட்டிற்குள் புகுந்து கடிக்க தொடங்கியது. எனினுன் நாயின் கழுத்தை பிடித்துக்கொண்ட அவர் நாயை தொடர்ந்து கடிக்க விடாமல் தற்காத்து கொண்டார். எனினும் முதலில் நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார். இதைக்கேட்டு அவரது சகோதரர் ஓடிவந்து நாயை விரட்டியடித்தார்.

தூங்கி கொண்டிருந்தவர்களையும்..
தொடர்ந்து சென்ற நாய் அதே கிராமத்தில் ஒரு நபரை கடித்தது. அவர் சத்தமிட கிராமத்தினர் ஓடி வந்து நாயை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதன் பின்னர் காட்டு வழியாக சென்ற அந்த நாய் சில விலங்குகளை வேட்டையாடி விட்டு செங்கல் சூளைக்குள் புகுந்தது. அங்கு காவலாளியாக இருந்தவரை இந்த நாய் விரட்ட தொடங்கியது. தொடர்ந்து ஓட முடியாததால் அவரையும் அந்த நாய் கடித்தது. எனினும் கடைசி நேரத்தில் காவலாளிக்கு சொந்தமான இரண்டு நாய்கள் வந்து பிட்புல் நாயை விரட்டியடித்தன. தொடர்ந்து இரவு நேரம் ஆகியதால் அந்த நாய் வீட்டு திண்ணைகளில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் கடிக்க தொடங்கியது.

நடைப்பயிற்சி சென்றவரை
இதையடுத்து அவர்களும் நாயை அடித்து விரட்ட மற்றொரு கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு அதிகாலை நடைப்பயிற்சி வந்த ஒருவரையும் அந்த நாய் விட்டுவைக்கவில்லை. அந்த நபரையும் நாய் கடித்து விட்டது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து நாயை அடிக்க முயன்றனர். ஆனால் அந்த நாய் தப்பி ஓடி விட்டது. இறுதியில் வயல்வெளியில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சக்தி சிங் என்பவரை கையில் கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பதிலுக்கு நாயை தாக்க தொடங்கினார்.

இறுதியாக முன்னாள் ராணுவ வீரர்
இருகாதுகளையும் பிடித்து தூக்கிய அவர் வயிற்றில் எட்டி மிதித்து நாயை தாக்கினார். இதற்கிடையே அந்த வழியாக சென்றவர்களும் சேர்ந்து அந்த நாயை சரமாரியாக தாக்கினர். இதில் அந்த நாய் செத்து போனது. பிட்புல் நாய் கடித்தால் இறக்கக்கூட நேரிடும் என்பதால் அவர்கள் அனைவரும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 5 கிராமங்களை சேர்ந்த 12 பேரை பிட்புல் நாய் தாக்கிய சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications