லடாக்கில் அத்துமீறிய சீனா.. தென்சீன கடலுக்கு போர் கப்பலை அனுப்பிய இந்தியா.. அடுத்தடுத்து பதற்றம்!

தென் சீன கடல் எல்லைக்குள் இந்தியா தனது போர் கப்பல்களை அனுப்பியதாக தகவல்கள் வருகிறது.

Subscribe to Oneindia Tamil

லடாக்: தென் சீன கடல் எல்லைக்குள் இந்தியா தனது போர் கப்பல்களை அனுப்பியதாக தகவல்கள் வருகிறது. லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    South China Sea-க்கு போர் கப்பல்களை அனுப்பிய Indian Navy | Oneindia Tamil

    லடாக்கில் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. லடாக் எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக சீனா அத்துமீற முயன்று உள்ளது.

    பாங்காங் திசோ அருகே சீனாவின் படை ஊடுருவ முயற்சி செய்துள்ளது. 29ம் தேதி மற்றும் 30ம் தேதி இரவு நேரத்தில் சீனா எல்லையில் அத்துமீற முயன்றுள்ளது.

    தடுத்து நிறுத்தியது

    தடுத்து நிறுத்தியது

    ஆனால் இங்கே ஏற்கனவே இந்திய படைகள் தயார் நிலையில் இருந்தது. சீனாவின் படைகள் அத்துமீற வாய்ப்புள்ளது என்று இந்திய படை தயார் நிலையில் இருந்தது. அதேபோல் சீனாவின் படைகள் எல்லையில் அடித்துமீற முயன்று இருக்கிறது. அப்போது சீனாவின் படைகளை தடுத்து, இந்திய படைகள் அவர்களை விரட்டி அடித்து இருக்கிறார்கள்.

    தென் சீன கடல் எல்லை பகுதி

    தென் சீன கடல் எல்லை பகுதி

    லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் இதேபோல் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு சீனாவிற்கும் - அமெரிக்காவிற்கும் மோதல் நிலவி வருகிறது. தென் சீன கடல் எல்லை பகுதி மொத்தம் தனக்குதான் சொந்த என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்கு இருக்கும் கடல் பகுதியில் 90% தனக்கு என்று கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

    மலேசியா ஆதரவு

    மலேசியா ஆதரவு

    தென் சீன கடல் எல்லையில் சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா, வியட்நாம், மலேசியா , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்து வருகிறது. இந்த நாடுகளுக்கு ஆதரவாகத்தான் தற்போது தென் கடல் எல்லைக்கு இந்தியா போர் கப்பலை அனுப்பி உள்ளது என்கிறார்கள். தென்சீன கடல் எல்லை அருகே இந்திய போர் கப்பல் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    எப்போது சென்றது

    எப்போது சென்றது

    கடந்த ஜூன் மாதமே இந்தியா இங்கு போர் கப்பலை அனுப்பியது. சீனா - இந்தியா இடையிலான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு இரண்டு கழித்து தென் சீன கடல் எல்லைக்கு இந்தியா போர் கப்பல்களை அனுப்பியது. இப்போது வரை இந்திய போர் கப்பல்கள் அங்குதான் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    கோபம்

    கோபம்

    அங்கு அமெரிக்காவின் நிமிட்ஸ் மற்றும் ரொனால்ட் ரீகன் போர் கப்பல்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய போர்கப்பல் தென்சீன கடல் எல்லைக்கு சென்றுள்ள நிலையில் சீனா லடாக்கில் அத்துமீறி உள்ளது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இல்லையா மோதலுக்கு பேச்சுவார்த்தை தீர்வளிக்காத நிலையில் இனி என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+