"தீபாவளிக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து சங்கடப்படுத்தாதீர்கள்"... ஆம் ஆத்மி அதிரடி!
டெல்லி: தீபாவளி பண்டிகையை ஒட்டி கட்சியினர் பரிசுப் பொருட்கள் கொடுத்து சங்கடப்படுத்த வேண்டாம் என ஆம் ஆத்மி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், தீபாவளிக்கு பரிசு பொருட்கள் கொடுத்து தங்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்று ஆம் ஆத்மி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் இவ்வாறு குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
"தீபாவளிக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து சங்கப்படுத்தாதீர்கள். கடவுள் சிலைகள் உள்ளிட்ட எதுவுமே வேண்டாம்."
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் ஊழலை குறைக்கும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என சமர்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர்களின் இந்த அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications