ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேட்க தைரியம் இருக்கிறதா? மீண்டும் ராகுலை சீண்டும் மோடி!

ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்க தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேட்க முடியுமா?.. மோடி கேள்வி- வீடியோ

    ராஞ்சி: ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்க தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி உள்ளார்.

    லோக்சபா தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தொடர்ந்து சில நாட்களாக மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து விமர்சித்து வருகிறார்.

    PM Modi Challenges Rahul Gandhi to campaign in Delhi in the name of Rajiv Gandhi

    கடந்த வாரம் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரத்தில் பேசிய மோடி, உங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. ஆனால் அது உண்மையில்லை. ராஜீவை மிஸ்டர் கிளீன் என்று கூட சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

    மோடியின் இந்த பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோடி இவ்வளவு தரக்குறைவாக மரணம் அடைந்த ஒரு பிரதமர் குறித்து பேச கூடாது என்று கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜார்கண்டில் நேற்று பேசிய பிரதமர் மோடி மீண்டும், ராஜீவ் காந்தி குறித்து பேசினார். அதில், இன்னும் தேர்தல் முடியவில்லை. இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் மீதம் இருக்கிறது. டெல்லியில் தேர்தல் நடக்க உள்ளது.

    நான் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்கள் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? முடிந்தால் நீங்கள் ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேளுங்கள். டெல்லியில் அவர் பெயரை சொல்லி உங்களால் வாக்கு கேட்க முடியுமா?

    போபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் அவர், டெல்லி பஞ்சாப்பில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமானவர். போபாலில் விஷ வாயு தாக்குதலுக்கு காரணமான வாரன் ஆண்டர்சனை தப்ப விட்டவரும் அவர்தான், அவரின் பெயரை சொல்லி உங்களால் வாக்கு கேட்க முடியுமா? என்று மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

    ராஜீவ் காந்தி குறித்து மோடி மீண்டும் குற்றச்சாட்டு வைத்து இருப்பதும், தொடர்ந்து அவர் குறித்து பேசி வருவதும் அரசியல் அரங்கில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+