பாக். மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 'சுதந்திர தின' வாழ்த்துகள்
டெல்லி: காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதம நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி தீவிரவாதிகள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டுள்ளான். அவன் விசாரணக்காக டெல்லி கொண்டுவரப்படுகிறான்.

இதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியான குர்தாஸ்பூரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதால் பாகிஸ்தானுடனான நட்புறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Greetings & good wishes to the people of Pakistan on their Independence Day.
— Narendra Modi (@narendramodi) August 14, 2015 மேலும் பாகிஸ்தானில் செப்டம்பர் 30-ந் தேதியன்று காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு ஜம்மு காஷ்மீர் சட்டசபை சபாநாயகர் அழைக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications