உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர்கள் தீவிர பிரசாரம்
உத்தரகாண்ட் தேர்தல் பிரசாரம் ஓய உள்ள நிலையில் இறுதி கட்ட பிரசாரங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் டெல்லியில் வசித்தாலும் என் மனதில் இருப்பது எல்லாம் உத்தரகாண்ட் மக்கள்தான் என்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ500க்கும் குறைவாக கிடைக்கும் என பிரசாரம் செய்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உத்தரகாண்ட் மாநிலத்தை சர்வதேச ஆன்மீக தலமாக மாற்றுவோம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதி.

மோடி இன்று பிரசாரம்
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: மத்திய பட்ஜெட்டில் பர்வத்மாலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகளுக்கு சாலைவசதிகள் செய்து தரப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தின் சாலைகள் நவீனமயமாக்கப்படும். எல்லைகளில் உள்ள உத்தரகாண்ட் மாநில கிராமங்கள் மத்திய அரசின் திட்டம் மூலம் பயனடையும்.

மீண்டும் பாஜக ஆட்சி
இது உத்தரகாண்ட் மாநிலத்துக்கான யுகம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது. அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மார்ச் 10-ந் தேதிக்கு பின் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் அமையும். உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாத்துறையை நாங்கள் மேலும் மேம்படுத்துவோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? அல்லது இடம்பெயரச் செய்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? என்பதை வாக்காளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

பாஜகவுக்கு மக்கள் ஓட்டு
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நேற்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பாஜக நிச்சயம் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெல்லும். வாக்காளர்கள் பாஜகவை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜம்ரானி அணை திட்டம் செயல்படுத்தப்படும். மானஸ்கண்ட் சுற்றுலா சர்கியூர் மேம்படுத்தப்படும்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications