மோடி நிகழ்ச்சிக்கு வர்ரீங்களா.. கான்டாக்ட் சர்டிபிகேட் கொடுங்க.. வெடித்த சர்ச்சை.. உத்தரவு வாபஸ்
ஷிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நாளை நடக்க இருக்கும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பத்திரிக்கையாளர்கள் நடத்தை சான்றிதழ் வழங்க வேண்டும் என மாநில நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
மலை பிரதேச மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி நாளை ஒருநாள் பயணமாக இமாச்சல பிரதேசம் செல்கிறார். இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
குறிப்பாக பிலாஸ்பூர் நகரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதுபோல பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடத்தை சான்றிதழ் தேவை
இதனிடையே, பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செய்திகளை சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் விவரங்களை அளிக்குமாறு செய்தி நிறுவனங்களுக்கு இமாச்சல பிரதேச மாநில நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. கடந்த 29 ஆம் தேதியிட்டு வெளியிடப்பட்ட கடிதத்தில், மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களின் நடத்தை சான்றிதழும் கேட்கப்பட்டு இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள்
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் முன்கூட்டியே பத்திரிகையாளர் விவரங்களை கேட்டு அவர்களுக்கான அடையாள அட்டையை வழங்குவது வாடிக்கையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், எப்போதும் இல்லாத வகையில், மோடியின் பொதுக்கூட்டத்தில் செய்திகளை சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் என அனைவருடைய கேரக்ட்ரையும் சரிபார்த்து நடத்தை சான்றிதழ்களை அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

கடிதத்தை வாபஸ் பெறுவதாக
மேலும் அவர்களை அனுமதிப்பது குறித்து அலுவலகம் முடிவு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்திய ரேடியோவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களும் இந்த விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய இந்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளர்.

வருத்தம் தெரிவித்தது
இது தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிலாஸ்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் தனது ட்விட் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், அனைத்து பத்திரிகையாளர்களும் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கான பாஸ் அரசு ஊடகத்துறை மூலமாக வழங்கப்படும். முந்தைய கடிதம் தவறுதலாக தனது அலுவலம் தரப்பில் இருந்து வெளியாகிவிட்டது. அதற்கு வருந்துகிறோம். இந்த கடிதம் வாபஸ் பெறப்படுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications