டெல்லிக்கே வந்து என்னிடம் பாஜக கூட்டணியில் சேர கெஞ்சிய தெலுங்கானா சிஎம் கேசிஆர்.. மோடி பொளேர் தாக்கு

Subscribe to Oneindia Tamil

நிஜாமாபாத்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காக டெல்லிக்கு வந்து என்னை சந்தித்தவ்ர்தான் தெலுங்கானா முதல்வரான பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர ராவ்; ஆனால் கூட்டணியில் அவரை சேர்க்க முடியாது என சொல்லிவிட்டேன் என பிரதமர் மோடி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கடந்த 3 நாட்களில் இன்று 2-வது முறையாக அம்மாநிலத்தில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தெலுங்கானா மக்கள், நிஜாம் ஆட்சியை நினைவில் கொள்ள வேண்டும்... நாடு சுதந்திரம் அடைந்த போது ஹைதராபாத் மற்றும் இந்த பகுதிகள் அனைத்தும் சுதந்திரம் பெறாமல் இருந்தன. அப்போது நிஜாம் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டார். ஆனால் குஜராத் மண்ணின் மைந்தன், சர்தார் வல்லபாய் படேல் தமது வலிமையால் நிஜாமாபாத் மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்தார். இன்னொரு குஜராத் மண்ணின் மைந்தன் நான் உங்களது வளர்ச்சி, ந்லனுக்காக வருகை தந்துள்ளேன்.

PM Modi reveals Telangana CM KC Rao want to join NDA

தெலுங்கானாவுக்கு ரூ. 8000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை வழங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்தத் திட்டங்களில் நவீன என்டிபிசி ஆலையும் அடங்கும், இது தெலுங்கானாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய வேகத்தைக் கொடுக்கும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி தெலுங்கானா மக்களுக்குப் பயன்படும்.

PM Modi reveals Telangana CM KC Rao want to join NDA

கடந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாஜகவின் ஆதரவு தேவையானதாக இருந்தது. முன்பு என்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்பார். தற்போது அதனை நிறுத்திவிட்டார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பின்னர் டெல்லி வந்த கேசிஆர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புகிறோம் என்றார். ஆனால் அவருடைய செயல்பாடுகளுடன் நம்மால் இணைந்து செயல்பட முடியாது என தெரிவித்துவிட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

PM Modi reveals Telangana CM KC Rao want to join NDA

தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் மோடி தொடர்ந்து வருகை தந்துள்ளார். கடந்த 6 முறை பிரதமர் மோடி வருகை தந்த போதும் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+