எனக்கு போய் கோவில் கட்டுவதா?: அதிர்ச்சியில் மோடி
டெல்லி: குஜராத்தில் தனக்கு கோவில் கட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பாஜக ஆதரவாளர்கள் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டியுள்ளனர். அந்த கோவிலில் மோடியின் மார்பளவு சிலையை வைத்துள்ளனர். கோவில் திறப்பு விழா வரும் 15ம் தேதி சிறப்பாக நடக்க உள்ளது.
இந்நிலையில் இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் பெயரில் கோவில் கட்டியுள்ள செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. இது போன்ற கோவில் கட்ட நம் கலாச்சாரம் நமக்கு கற்றுத் தரவில்லை. இந்த கோவில் விவகாரத்தால் கவலை அடைந்துள்ளேன். இதை செய்தவர்களை இது போன்று செய்யாதீர்கள் என்று வலியுறுத்துகிறேன்.
உங்களுக்கு நேரமும், பணமும் இருந்தால் அதை சுத்தமான இந்தியா கனவை நிறைவேற்ற தயவு செய்து பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவிலை கட்டிய ஓம் யுவா அமைப்பின் தலைவர் ஷங்கர் பட்டேல் கூறுகையில்,
கடந்த 11 ஆண்டுகளாக மோடியின் புகைப்படத்தை வைத்து வணங்கி வந்தோம். தற்போது புகைப்படத்திற்கு பதில் சிலையை வைத்துள்ளோம். வரும் 15ம் தேதி திறப்பு விழா நடத்துகிறோம். அன்றைய தினம் பலருக்கு திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications