துப்பாக்கிக் குண்டுகளை விட வாக்குகள் வலிமையானவை...: காஷ்மீரில் மோடி பிரச்சாரம்
ஸ்ரீநகர் : தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு சம்பா மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ‘இத்தேர்தலால் காஷ்மீரில் பெரும் மாற்றம் உருவாக வேண்டும்' என விருப்பம் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உட்பட 11 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே, நாளை காஷ்மீரில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காஷ்மீர் தேர்தலை ஒட்டி, முன்னதாக திட்டமிட்டபடி இன்று ஸ்ரீநகரில் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், இந்த பயணத்தின்போது கடந்த வெள்ளிகிழமை தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மோடி ராணுவத்தின் பதாமி பாக் தலைமையகத்திற்கு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி காஷ்மீரில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் சென்ற மோடி, சம்பாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :-
இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, இந்த தேர்தல் காஷ்மீரில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. காஷ்மீர் மாநில மக்கள், வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்பு, அடிப்படைவசதிகள் ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர் என்பது எனக்கு தெரியும்.
இளைஞர்கள் வேலை கேட்கின்றனர். விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கேட்கின்றனர். குழந்தைகள் நல்ல கல்வியை கேட்கின்றன. வயதானவர்கள் நல்ல மருத்துவ கவனிப்பு தேவை என்கின்றனர்.
எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் பிரச்னைகளை தீர்க்கப்பட்டு வருகின்றன. அப்பா, மகன் அல்லது அப்பா, மகள் என்று தான் காஷ்மீரை ஆண்டு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்ததில்லை. அவர்களுக்கு இந்த முறை ஓட்டு போடாதீர்கள். துப்பாக்கிக் குண்டுகளை விட வாக்குகள் வலிமையானவை' என இவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications